அகமுடையார் சமுதாய அமைப்பு பிரதிநிதிகளின் ஆலோசனைக்கூட்டம்.சக்தி-ரமா திருமண மண்டபம்,மாநகராட்சி காலனி,விமானநிலையம் சாலை,மதுரையில் 23-09-2012- ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு சரியாக தொடங்கப்படும்..

வரலாறு

மருது பாண்டியர் கூட்டமைப்பு

மருதுபாண்டியர் கூட்டமைப்பு என்பது சின்ன மருது தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய போராளிகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். 

வரலாறு
வணிக நோக்கோடு தென்னிந்தியாவில் காலூன்றிய பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியார் தென்னிந்தியாவில் பாளயக்காரர்களுக்கு இடையே பிரித்தாளும் சூழ்ச்சியினைக் கையாண்டனர்.
முதல் பலிக்காடாவாக ஆனவர் ஆற்காடு நவாப். நவாபுக்கு இதுகாறும் கப்பம் செலுத்திவந்த தமிழக பாளையப்பட்டுக்கள் ஆங்கிலேயர்களின்கொடுங்கோன்மைச் சுரண்டலுக்கு இரையாகின. பிரித்தானிய எதிர்ப்பு, ஓர் இயக்கமாக இல்லாவிடிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேர் விட்டுக்கொண்டிருந்த நேரம்.
1799 ஆம் ஆண்டு பிரித்தானியர் எதிர்ப்புப் புரட்சியில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. திருநெல்வேலியும் மைசூரும் அன்னிய ஆதிக்கத்திற்கு இரையாயின. ஆங்கிலேயர்கள் பெற்ற இவ்வெற்றி தேசியப் போராட்டத்திற்கு மரண அடியாக அமையவில்லை. பிரித்தானிய எதிர்ப்பு அமைப்புகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே அமைந்தது. தென்னிந்தியாவின் வட பகுதியில் திப்பு சுல்த்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர மரணம் எய்திய செய்தியும், கட்டபொம்மனுடைய வீர மரணமும் ஒருங்கிணைந்த தேசிய உணர்ச்சியைத் தென்னிந்தியா முழுமையும் பரவக் காரணமாக அமைந்தன.

கூட்டமைப்பு

பாஞ்சாலங்குறிச்சியின் அழிவுக்குப்பின்னால் பிரித்தானிய எதிர்ப்புப் போராளிகள் ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனைகளுக்கு அஞ்சிசிவகங்கைச்சீமையின் அடர்ந்தக் காட்டுப் பகுதியான காளையார்கோவில் காடுகளில் தஞ்சமடைந்ததுடன் அங்கு ஏற்கனவே இருந்த புரட்சிக் கூட்டமைப்போடு இணைந்து கொண்டனர். மைசூரின் வீழ்ச்சியை அடுத்து மேற்குப் பகுதியிலிருந்த போராளிகளும் இப்பாதுகாப்பான காளையார் கோவில் காட்டுப் பகுதிக்கே வந்து தஞ்சமடைந்தனர்.
காளையார்கோவில் காட்டுப் பகுதியானது மானாமதுரை, சாக்கோட்டை, சிங்கம்புணரி ஆகிய இடங்கள் வரையில் சுமார் 50 மைல் சுற்றளவுக்குப் பரவியிருந்தது. அடர்ந்த காட்டுப் பகுதி இது. தற்போது பேசப்படும் கெரில்லாப் போர் தந்திரங்களுக்குத் தகுதியான வனப்பகுதி. இதனிடையே கிராமங்களோ, விவசாய நிலங்களோ இல்லை. இங்குள்ள மரங்கள் எல்லாம் வலுவானவை, தரையோடு படர்ந்துள்ள மரங்களும் அதிகம். மருதிருவரின் படைவீரர்களால் காக்கப்பட்டு மாற்றார் அணுகா வண்ணம் அமைந்திட்ட இப்பகுதி மைசூர் திருநெல்வேலி வீழ்ச்சிக்குப் பின்னால் போராளிக் குழுக்களின் நடவடிக்கைக்கு மையமாக அமைந்தது.
பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிரான சக்திகள் ஓர் இயற்கை இயக்கமாக உருமாற்றம் அடையக் காரண கர்த்தா சின்ன மருதுபாண்டியர் ஆவார். மருதுபாண்டியரின் அருகாமை, போராளிக் குழுக்களுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் இயக்க எதிர்ப்பானது உன்னதமான உயிர்த் தியாகங்களுக்கு தயாராக இருந்த வீரர் படையைப் பெற்றிருக்கமுடியாது.
சின்ன மருதுபாண்டியர் ஆங்க்கிலேயரின் பலவீனத்தை நன்கு அறிந்த ராஜ தந்திரியாவார். ஒரு பாளையத்திற்குமேல் இரண்டு பாளையங்கள் சரியானபடி முழுமூச்சாக எதிர்த்தாற்கூட ஆங்கிலேயர் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். இதை உணர்ந்துதான் சின்ன மருது கூட்டமைப்பைக் கூட்டத் தொடங்கினார். ஆனால் ஆங்கிலேயர் தம் நோக்கம் நிறைவேறப் பாளையங்களை ஒன்று சேரவிடாமல் அவர்களுக்குள் சிண்டு முடிந்தனர்.
வெல்லற்கரிய அவ்வீரர் அடுத்துச் செய்தது, போராளிக் குழுமங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளச் செய்த்தாகும். கிராமங்களின் நாட்டாமைகளுக்கும் பாளையங்களின் தலைவர்களுக்கும் தூதுவர்களை அனுப்பி புரட்சி இயக்கச் செய்தியைக் கொண்டு செல்லவைத்தார். அக்கூட்டமைப்புக்கள் மிகத்திறமையான தலைவர்களின் கீழ் திரைமறைவில் இரகசியமாக இயங்கத்தொடங்கின.
தென்னகத்தின் விடுதலைப் போராளிகளின் கழகங்கள் அல்லது கூட்டமைப்புக்கள் எவ்வாறு ஒரு கட்டுக்கோப்புக்குள், ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிறந்த தலைமையின் கீழ் இயங்கின என்பதைக் காட்டும்.
  • தஞ்சைப்பகுதி:- ஞானமுத்து
  • இராமநாதபுரம் பகுதி :- மயிலப்பன், சிங்கம் செட்டி,முத்துகருப்பர்
  • மதுரை மற்றும் சிவகங்கைப் பகுதி :- மருதிருவர்
  • திண்டுக்கல் மற்றும் திருச்சிப் பகுதி :- விருப்பாட்சி கோபால நாயக்கர்
  • கோவை மற்றும் சேலம் பகுதி :- கானிஜா கான்
  • வட கேரளம் ( மலபார் ):- கேரள வர்மன் ( பழசி ராஜா )
  • மேற்கு மைசூர் :- கிருஷ்ணப்ப நாயக்கர்
  • வட கன்னடம் மற்றும் அதன் வடபாலுள்ள பகுதிகள் :- தூண்டாஜி வாக்
இவற்றில் இராமநாதப் போராளிகள், தஞ்சைப் போராளிகள், சிவகிரிப் பாளையக்காரரின் மைந்தன் மாப்பிள்ளை வன்னியன் தலைமையிலான மேற்கு நெல்லைப் போராளிகளின் கூட்டுக் குழுக்கள் சின்ன மருதுவின் தலைமையை ஏற்றன. கிழக்கு நெல்லைப் போராளிகளின் கழகத் தலைவரான கட்டபொம்மனுக்கு உந்து சக்தியாக விளங்கியவரே சின்ன மருதுதான்.

வாட்டகுடி இரணியன்

வாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் 

இவர்களின்   நினைவுகளை மறக்க கூடிய 

மனிதர்களாகவா  மாறிவிட்டோம்?



ஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக மாற வேண்டிய அதிகார மையம் தன் சுயரூபத்தை வெளிகாட்டி ஆங்கில அதிகார மையம் கையாண்ட அதே நடைமுறையான பண்ணையார்கள்,ஜமீன்தார்கள் என இவர்களின் நலன்களில் மட்டுமே நாட்டம் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பிக்கின்ற காலகட்டம்.


தஞ்சை மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் மக்களின் ஜீவாதரமான தொழில் விவசாயம் இங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் விவசாய சங்கம் 1943 -ல் முதலில் திருத்திறைபூண்டியிலும் பின்பு ஆம்பலாப்பட்டிலும் என்று எங்கும் பரவலாக
தொடங்கபடுகிறது. ஒடுக்கபட்ட மக்களின் தோழனாக நின்று அவர்களின் நலங்களுக்காக போரடிய கம்யூனிஸ்ட் இயக்கம் 1948 காலகட்டத்தில் தடைசெய்யபடுகிறது. இயக்கம் தடைசெய்யப்பட்டிருப்பினும் மக்கள் படுகின்ற கொடுமைகளை கண்டு தலைமறைவு வாழ்கை வாழ்ந்துகொண்டு அவர்களின் நலங்களுக்காக போரடுகின்றனர். விவசாயி என்று பெயரளவில் தான் இருந்தனர், நிலங்கள் இருந்தும் அதன் ஏகபோக உரிமையாளர்களாக ஜமீன்தாரும் அவர்களின் அடிவருடிகளும் தான் இருந்தனர். தினமும் காலை முதல் மாலைவரை செய்து கிடைக்கின்ற பலன்களில் பங்குதாரர்களாகவும்,உரிமையாளர்களாகவும் இருந்தனர் ஜமீன்தார்கள் மற்றும் அடிவருடிகள்.இந்த இழி நிலையை கண்டு அவர்களின் உரிமையினை பெற்று தர போரடி அதற்காக தன் உயிரையும் இழந்தனர் வாட்டாகுடி இரணியன்,ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பாவான் ஒடை சிவராமன், இந்த தியாகிகளின் நினைவாக கட்டபட்ட நினைவுதூண் தான் பட்டுகோட்டை நகராட்சியால் இடிக்கபட்டுள்ளது.சாலை போக்குவரத்துக்கு இடைவூறாக இன்றும் எந்தனையோ அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மற்றும் வழிபாட்டுதளங்கள் என்று எண்ணிலடங்கானவை உள்ளன.ஒவ்வொரு வருடமும் அதற்க்கு மரியாதை செலுத்த சாலை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டாடுகின்றவர்களுக்கு இவர்களின் தியாகம் எவ்வாறு புரிந்திருக்கும்.


நவீனமாக்கபடபோகின்ற மயான கொட்டகைக்கு எந்த விதத்திலும் இடையூறு ஆகாத நினைவு தூண் இடிக்கப்ட வேண்டிய அவசியம் ஏன்? தன் முன்னோர்களின் சுயவுரிமை வாழ்வுக்காக போரடியதினால சுட்டுகொள்ளபட்ட இந்த தியாகிகளின் நினைவுகள் தற்போதைய தன் சந்ததிகளுக்கு தேவையில்லை என்று மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகள் முடிவெடுத்தனரா?.

என்னை போன்றவர்களுக்கு இன் நிகழ்வு இவ்வறாகத்தான் புரிய வைக்க முயற்சிக்கிறது அன்றைய காலகட்டம் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை தற்போதைய நிகழ்காலம் அவர்களின் தியாகத்தை புரிந்துகொள்ளவில்லை என்றே

.

தியாகி ஆம்பல்.ஆறுமுகம் நினைவு தூண்.ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் (கம்யூனிஸ்ட்) டாக்டர் வே.துரைமாணிக்கம் அவர்கள் ச.சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் 'ஆம்பல் ஆறுமுகம்' என்ற புத்தகத்திற்கு கீழ்வருவன போல் வாழ்த்துரை வழங்கியுள்ளார், அதை இங்கு குறிப்பிடுவது சரியானதாக இருக்கும் என்று கருதி பதிந்துள்ளேன்.

'கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் ஏ.கே.கோபாலன்,மணலி கந்தசாமி,பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர்.அவர்களை காட்டிகொடுக்க செம்பாளூரை சார்ந்த மிராஸ்தார் ஒருவர் முயற்சி எடுத்தார்.அவரின் முயற்சியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை கடுமையான வழக்காக மாற்றப்பட்டது.அதுதான் செம்பாளுர் வழக்கு.அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆம்பலாப்பட்டசேர்ந்வெ.அ.சுப்பையன்,எஸ்.ஏ.முருகையன்,டி.காசிநாதன்,வாட்டாகுடி இரணியன்,ஆறுமுகம் உள்ளிட்ட பலர்.தேடுதல் வேட்டையில் இரணியனும்,ஆறுமுகமும் வடசேரி என்ற ஊரில்காவல் துறையினரிடம் சம்பந்தம் என்கின்ற சதிகாரன் காட்டிகொடுத்ததால் அகப்பட்டுகொண்டார்கள்.05.05.1950 அன்று அதிகாலை சவுக்கு தோப்பில் மரத்தில் கட்டி வைத்து சிங்கநிகர்த் தோழன் இரணியனை சுட்டு வீழ்த்தினார்கள்.ஆறுமுகத்தை பார்த்து, மணலி கந்தசாமி இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு ஒடித் தப்பிதுகொள்.உன் மீது வழக்கு இல்லை என்று ஏமாற்றுகிறார்கள்.காக்கி சட்டைகாரர்களின் வஞ்சக எண்ணத்தை புரிந்து கொண்ட ஆறுமுகம், என்னை ஒடச்சொல்லி முதுகில் சுடப்பார்கிறாயா? ஓடினான் சுட்டேன் என்று கதை கட்டிவிட பார்க்கிறாயா? என் தலைவனை காட்டிக் கொடுக்கவும் மாட்டேன், முதுகு காட்டி ஓடவு மாட்டேன்.முதுகில் சூடுபட்டு சாக நான் கோழையல்ல.எனது கட்சிக்கும்,லட்சியத்திற்க்கும் நான் ஏற்றிருக்கும் மார்க்சிய,லெலினிய தத்துவத்திற்கும் இழக்கு ஏற்பட எள் முனையளவும் இடம் தரமாட்டேன்.கூலிப் பட்டாளமே எனது நெஞ்சில் சுடு என்று நெஞ்சை நிமிர்த்து காட்டினார்.துப்பாக்கி குண்டுகள்
நெஞ்சை துலைத்தன.திருமணமாகாத 22 வயதே நிரம்பிய அந்த புறட்சியாளன்,புரட்சி ஓங்குக! என்ற முழக்கத்துடன் பிணமானார்.அவரது உயிர் பிரிக்கபட்டது.அவரது உடல் அழிக்கபட்டது.அவரது லட்சியம் அழியவில்லை.அந்த மாவிரன் தொடங்கிய லட்சிய பயணத்தில் எண்ணற்றவர்கள் அணி வகுத்து நிற்கிறார்கள்.

தேவர் – காமராஜர் ஆரம்பகாலத்தில்


1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர் விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டர். சிறந்த தேச பக்தராகத் திகழ்ந்தார். அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க வேண்டுமென பசும்பொன் பெருமகனார் நினைக்கிறார்
ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை இல்லை. காரணம் அவர் பெயரில் எந்த ஒரு சொத்தும் இல்லை. காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரைப் பார்த்து "உங்கள் மகனை தேர்தலில் நிற்க வைக்கப் போகிறேன். உங்கள் பெயரில் உள்ள வீட்டை காமராஜ் பெயரில் எழுதி வையுங்கள்" என்று பசும்பொன் பெருமகனார் கேட்கிறார்.
அப்படி பசும்பொன் பெருமகனார் கேட்டதற்குக் காரணம், இன்று போல் 18 வயது வந்தோரெல்லாம் அன்று வாக்களிக்க முடியாது. யாருக்கு சொத்து இருக்கிறதோ, யார் வரி செலுத்துகின்றாரோ அவர் தான் வாக்காளாராக முடியும். அதனால் தான் பசும்பொன் பெருமகனார் சிவகாமி அம்மையாரிடம் வீட்டை மாற்றி எழுதி வைக்கக் கேட்டார். அதற்கு அந்த அம்மையார் அவர்கள் "தேவரையா! எனக்கு இருப்பது இந்த ஒரு வீடு தான். என் மகனை ஓட்டராக்குவதற்காக இந்த வீட்டை அவன் பேருக்கு எழுதிவைக்க முடியாது. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நானோ விதவை. எங்கள் சாதியில் ஒரு வீடாவது இருந்தால் தான் அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைப்பார். என் மகன் காமராஜ் வீட்டுக்கு உதவாத பிள்ளையாக போய்விட்டான். அவனுக்கு எழுதி வைத்துவிட்டு நானும் என் பெண்ணும் தெருவில் நிற்கமுடியாது" என்று தாயும் மறுத்த காலம் அந்த காலம்.
அதற்கு மேல் பசும்பொன் பெருமகனார் எதுவும் யோசிக்காமல் நான்கு வெள்ளாட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர் நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டு காமராஜரை வாக்களராக்கி தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் பசும்பொன் பெருமகனார்.
பசும்பொன் பெருமகனாரின் வழிகாட்டுதலும் தேர்தல் பணிகளாலும் இத்தேர்தலில் காமராஜரின் விருதுநகர் நகரசபை தேர்தலில் வெற்றியும் பெற்றார். ..
செட்டிநாட்டு வட்டாரத்தில் காங்கிரஸ் மானத்தைக் காத்த தேவர், விருதுநகர் வட்டாரத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்று கேள்விப்படுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் காமராஜரை பட்டப்பகலில் விருதுநகர் பஜார் தெப்பக்குளம் வீதியில், ஜில்லா போர்டு தேர்தல் நடந்த சமயத்தில் காமராஜரின் வேட்டியை உரிந்து விட்டு இரண்டு சண்டியர்கள் வேட்டியை இருபுறமும் மிதித்துக் கொண்டார்கள். வேறு இரண்டு சண்டியர்கள் சாணி உருண்டைகளை முகத்தில் எறிந்தார்கள்.
இந்த சம்பவத்திற்கு மேலாக தற்போது இரவோடு இரவாக காமராஜரை காரில் தூக்கி போட்டு பட்டிவீரன்பட்டி சென்று அங்கேயுள்ள சௌந்திரபாண்டிய நாடார் வாழைத் தோப்பில் கொலை செய்து புதைத்துவிட வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டியிருக்கும் தகவல் பசும்பொன் பெருமகனாருக்குக் கிடைக்க, உடனே தேவர் விருதுநகருக்கு வருகிறார்.
காமராஜரை சந்தித்து மேலே சொன்னவைகள் உண்மை தானா என்று கேட்கிறார். 'ஆமாய்யா, அப்படித்தான் சொல்கிறார்கள்" என்றார் காமராஜர்.
அன்று இரவு விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் பொதுக் கூட்டம். காமராஜருக்கு ஓட்டுக் கேட்டு பசும்பொன் பெருமகனார் பேசினார். அவர் பேச்சில் தீப்பொறி பறந்தது.
"இங்கே இருக்கிற நாடார் உறவின் முறை மகமை கடைக்காரர்களுக்கு சொல்லுகிறேன். நீங்கள் சில லட்சங்களை வைத்துக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டுவதாக கேள்விப்படுகிறேன். இங்கிருக்கின்ற ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள் வீட்டுக்கு வெள்ளைக்கார அதிகாரிகள் வந்து போவதை சாதகமாக நினைத்துக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு நடந்தால் அந்த அறியாமைக்காக அடியேன் வருத்தப்படுகிறேன். நாங்கள் வெள்ளைக்காரர்களையே எதிர்க்கும் கூட்டம், உங்களை எதிர்ப்பதும், உங்கள் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதும் எங்களுக்கு முடியாத காரியமல்ல. விருப்பமான காரியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
1936-ல் நடந்த தேர்தலின் போது காமராஜரை வேட்டியை உரிந்து படுத்திய பாட்டை கேள்விப்பட்டேன். சூழ்நிலை அந்த நேரம் இங்கு நான் வரமுடியாமல் போய்விட்டது. இப்போது காமராஜரை கொலை செய்து தீர்த்துக் கட்டி விடலாம் என்று பேசுவதாக கேள்விப்படுகிறேன்.
காமராஜர் ஏழைத்தொண்டன் என்று இங்கே உள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நினைத்தால் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். காமராஜருக்குப் பின்னால் காங்கிரஸ் மகா சபை இருக்கிறது. அதே மகா சபையில் எங்களைப் போல் எந்தவித தியாகத்திற்கும் தயாராக உள்ள கோடான கோடிப் பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதை மீறி காமராஜர் மீது ஒரு ஒரு சிறு துரும்பு படுமேயானால் இங்கே ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி.ராமசாமி நாடாருக்கு நான் எச்சரிக்கையாகச் சொல்கிறேன். நீங்கள் வீதியில் நிம்மதியாக நடமாட முடியாது. இரும்புக் கவசம் போட்டுக் கொண்டுதான் நடமாட முடியும்" என்று வேகமாகப் பேசினார்.
அந்தப் பேச்சுக்கு பின்னால் பசும்பொன் பெருமகனாருடைய ஆட்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம், நான் கிராமங்களுக்குப் போய் ஒட்டுக் கேட்கும் பொழுது எனக்கு போலீஸ் பந்தோபஸ்து வேண்டும் எண்டு கலெக்டரிடம் வி.வி.ராமசாமி நாடார் கேட்டார்.
அதற்கு கலெக்டர் "உங்கள் வீட்டுக்கோ நடத்தும் பொதுக் கூட்டத்திற்கோ பந்தோபஸ்து கேட்டால் நாங்கள் தாராளமாகக் கொடுக்கலாம். நீங்கள் கேட்பது போல் ஓட்டுக்கேட்கப் போகும்போது போலீஸ் பந்தோபஸ்து கொடுத்தால், தேவர் சாதாரண மனிதரல்ல. போலிசோடு நீங்கள் ஓட்டுக் கேட்பதை போட்டோ எடுப்பார். ஜஸ்டிஸ் கட்சி போலீஸை வைத்து தேர்தல் நடத்துகிறது. போலீசாரை வைத்து மிரட்டி ஓட்டுக் கேட்கிறது என்று கோர்டுக்குப் போவார். அதன்பின் எங்கள் நிலை என்னவாகும்" என்று சொல்லி மறுத்தார்.
வி.வி.ராமசாமி நாடார் கிராமங்களுக்குப் போய் ஓட்டுக் கேட்க முடியாத நிலையில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். காமராஜ் நாடார் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பசும்பொன் பெருமகனாருடைய ஆதரவு மட்டும் அன்றைக்கு காமராஜருக்கு இல்லாமல் இருந்திருக்குமானால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது மாத்திரமல்ல, காமராஜ் நாடாரை ஜஸ்டிஸ் கட்சியினுடைய பெரும்புள்ளிகள் உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? என்பது கூட சந்தேகம் தான்.

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி


வீரமும் மானமும் விஞ்சியவர் தமிழ் மறவர். இவர்களது தொன்மையையும், வாழ்க்கைச் சிறப்பையும் சங்க இலக்கியங்களான அகநானுhறு , புறநானுhறு, நற்றினை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை ஏற்றிப் போற்றுகின்றன. விழுடககொடை மறவர், பினைகழல் மறவர், பெருந்தொடை மறவர் என்பன அந்த இலக்கியங்கள்மறவர்களுக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள்.
எதிரி எமனாக இருந்தாலும் அவனை அழித்து ஒழிப்பவர் மறவர் என, பகை என கூற்றம் வரினும் தொலையான் என்பது மறவர்களுக்குக் கூலித் தொகை கூறும் கட்டியமகும். பத்தாம் நுhற்றாண்டில் சோழர்கள் பெரும் நிலை எய்துவதற்கும், பதின்மூன்றாம் நுhற்றாண்டில் பிற்காலப் பேரரசர்களாகப் பாண்டியர் பெருமிதம் கொள்வதற்கும் அரசப்படையாக நின்று உதவியவர்கள் இந்த மறவர்கள். இவர்கள் மிகுதியாகவும் தொகுதியாகவும் வாழ்ந்த நாடு (இன்றைய இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகள்) மறவர் சீமை என வாலாற்றில் குறிக்கப்படுகிறது.
இவர்களது மூத்தகுடிமகனான மறவர் சீமை மன்னர், " புனித சேது காவலன்" என வழங்கப்பட்டார். கி.பி. பதினைந்தாம் நுhற்றாண்டு முதல் தமிழ்மொழிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள மகத்தான பங்கு காலத்தால் மறைக்க முடியாதது. அவர்களது வீரம், கொடை, புலமை ஆகியவற்றைப் போற்றும் இலக்கியப் படைப்புகளும் தனிப் பாடல்களும் ஏராளம். அவர்களிடமிருந்து முத்தமிழ் புலவர்களும், கலைஞர்களும் பெற்ற ஊர்களும், மான்யங்களும் இன்னும் மிகுதியானவை.

இத்தகைய புகழுக்குரிய வரலாற்று நாயகர்களான சேதுமன்னர்கள் இந்திய நாட்டு விடுதலை வேள்வியிலும் தங்களது முத்திரையைப் பதித்துச் சென்று இருப்பது நம்மையெல்லாம் வியக்க வைக்கின்றது.
இன்றைக்கு இருநுhற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக வரலாற்றைத் தடம்புரளச் செய்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்ற வணிக நிறுவனம். அப்பொழுது இந்திய nhரரசாக விளங்கிய ஜஹாங்கீரின் அனுமதி பெற்ற இந்நிறுவனத்தினர் குஜராத்திலும், வங்காளத்திலும் தங்களது பண்டகசாலைகளை அமைத்து வாணிபத்தில் ஈடுபட்டனர். பின்னர் மசூலிப்பட்டிணத்திலும், சென்னையிலும் தங்களது நிலைகளை வலுவுடையதாக்கிக் கொண்டனர். அடுத்து, வாணிகத்திற்குப் புறம்பாக உள்நாட்டு பூசல்களிலும் தலையிட்டுத் தங்களுக்குப் பயனளிக்கும் கட்சிக்காரர்களை முழுக்க முழுக்க ஆதரிப்பவர்களாக விளங்கி வந்தனர்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது மதுரை நாயக்க மன்னரது மறைவிற்குப்பிறகு கப்பத்தொகையினை யாருக்கும் கொடுக்காமல் சுயாதீனமாக இயங்கி வந்த தென்னகப் பாளையக்காரர்கள் நவாப்முகம்மதுஅலிக்குக் கப்பத்தொகை கொடுக்க மறுத்தனர். அவர்களை அடக்கி ஒடுக்கி அவர்களிடமிருந்து கப்பம் பெறுவதற்குப் பரங்கியரது கூலிப்படை நவாப்பிற்கு உதவியது. இந்த வகையில் நவாப் முகம்மது அலி, கும்பெனியாருக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகை கூடிக் கொண்டே சென்றது. பாளையக்காரக்களைத் தவிர , அப்பொழுது தென்னகத்தில் திருவாங்கூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை ஆகிய பரம்பரைத் தன்னரசுகளும் இயங்கி வந்தன. இவர்களிடமிருந்தும் கப்பம் பெறும் உரிமை தமக்கு உள்ளது என வலியுறுத்திய நவாப், கும்பெனியாரது படைபலத்தைக் கொண்டு திருவாங்கூர், தஞ்சாவூர், மன்னர்களை இணங்க வைத்தார். புதுக்கோட்டை மன்னர், நவாப்பிற்கும், கும்பெனியாருக்கும் பலவிதத் தொண்டுகளைச் செய்து வந்ததால் அவரிடம் மட்டும் கப்பம் கேட்டு நிர்பந்திக்கவில்லை.
ஆனால் மதுரை நாயக்க மன்னர்களுக்கே திறை செலுத்தாமல் தன்னரசாக இருந்து வந்த மறவர் சீமை மன்னர்களை என்ன செய்வது ? அவர்களுக்குத் திறை செலுத்த ஆணை பிறப்பித்துத் தவணை கொடுத்துப் பணம் செலுத்தக் காத்திருப்பதில் எந்தப் பலனும் இல்லை என நவாப் முகம்மது அலி முடிவிற்கு வந்தார். ஆதலால் அவர்களையும் ஆயுத வலிமை கொண்டு அடக்கிக் கப்பத் தொகையினைப் பெற வேண்டும் ! நவாப்பினது மகன் உம்தத்துல் உம்ரா, கும்பெனித் தளபதி ஜோசப் சுமித் ஆகிய இருவரது தலைமையில் திடிரென 29.5.1772 ஆம் தேதி பெரும்படை மறவர் சீமைக்குள் புகுந்து தலைநகரான இராமநாதபுரம் கோட்டையைச் சுற்றி வளைத்தது. இராமநாதபுரம் சேதுபதி மன்னராக இருந்த பன்னிரண்டு வயது நிரம்பிய இளவல் முத்துராமலிங்க சேதுபதிக்காக அவரது தாயார் முத்து திருவாயி நாச்சியாரும் பிரதானிபிச்சப் பிள்ளையும் நிர்வாகத்தை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து நவாப்பின் மகன் உம்தத்துல் உம்ரா, ராணியாருடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ராணியார் ஆற்காடு நவாப்பின் மேலாதிக்கத்தை ஏற்கவும், அவருக்கு அடங்கிக் கப்பம் கட்டுவதையும் மறுத்துவிட்டார். இராமநாதபுரம் கோட்டையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பேய்வாய்ப் பீரங்கிகள் கோட்டை மீது நெருப்பைக் கக்கின. அக்கினி மழையில் நனைந்த கோட்டைச் சுவரின் கிழக்குப்பகுதியில் இரண்டாம் நான் போரில் ஏற்பட்ட பிளவின் ஊடே பரங்கியர் கோட்டைக்குள் புகுந்தனர். அரண்மனை வாயிலில்நடைபெற்ற வீரப் போரில் மூவாயிரத்திற்கும் மிகுதியான மறவர்கள் தாயகத்தை காக்கும் தொண்டில் தங்களது உயிரைக் காணிக்கையாகத் தந்தனர் என்றாலும் போப்பயிற்சியும் கட்டுப்பாடும் மிக்க பரங்கியருக்கே வெற்றி கிடைத்தது.
ராணியும் அவரது இருபெண்குழந்தைகள், சிறுவன் சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டுத் திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். சேதுபதி சீமையில் ஆற்காடு நவாப்பின் ஆட்சி, பரங்கியரது பாதுகாப்பில் நடைபெற்றது. குழப்பம் அராஜகம், கலகம் இவைகளுக்கிடையில் கிடைத்தது ஆதாயம் என நவாப் எண்ணினார். என்றாலும் இராமநாதபுரம் சீமையில் தெற்கிலும், வடக்கிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகள் நவாப்பின் நிர்வாகத்தை அலைகழித்து அச்சுறுத்தின. ஆதலால் இராமநாதபுரம் சீமையின் மீதான தமது பிடிப்பை முழுமையாக இழந்துவிடாமல் தக்க வைத்துக் கொள்ள நவாப், சேதுபதி மன்னருடன் சமரச உடன்பாடு ஒன்றினைச் செய்து கொண்டு சேதுபதி மன்னர் இராமநாதபுரத்தில் தமது ஆட்சுயைத் தொடர கி.பி. 1781 -இல் வழிகோலினார்.
தொன்று தொட்டு மறக்குடி மக்களது தன்னரசாக விளங்கிய சேது நாட்டின் தன்னாட்சி உரிமையைப் பறித்துச் சேதுநாட்டை ஆக்கிரமிதத்துடன், தன்னையும் தமது டும்பதிதினரையும் பத்து ஆண்டுகள் திருச்சிக் கோட்டையில் அரசியல் கைதிகளாக அடைத்து வைத்து, அவல வாழ்க்கையை அனுபவிக்கச் செய்த நவாப்பையும், அவரது ஏவலரான கும்பெனியாரையும் பழிவாங்கச் சேதுபதி மன்னர் துடித்தார். இடைஞ்சல் ஏற்படுத்திய எவரையும் யனை மறப்பது இல்லை அல்லவா?
நாட்டின் பாதுகாப்பை வலுவுள்ளதாக்கினார். திருவாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிச் சீமைப் பாளையக்காரர்களுடன் நல்ல நேச உறவுகளைக் கொண்டிஐந்தார். சேதுநாட்டின் நவாப்பின் பேரரசையும், கும்பெனியாரது ஏகாதிபத்திய நிழலையும் படரவிடாமல் தடுக்க, டச்சுக்காரiர்களுடன் உடன்பாடு செய்து கொண்டு அனைறைய போர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பெரிய பீரங்பிகளைத் தயாரிக்கும் ஆயுதச் சாலையை இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள காட்டுப்பகுதியில் தொடங்கினார்.
சேது நாட்டில் இயங்கிய அறுநுhறு தறிகளில் நுhற்று ஐம்பது சேதுபதி மன்னரது குத்தகைக்கு உபட்ட தறிகளாக இருந்தன. புதுச்சேரி பிரஞ்ச்சுக்காரர்களும் தரங்கம்பாடி டச்சுக்காரர்களும், சேது நாட்டின் கைத்தறித் துணிகளை விரும்பி வாங்கி வந்தனர். இதனால் சேதுபதி சீமையில் போர்ட்டோ நோவா பக்கோடா என்ற டச்சுப் பணம் பரவலாக நாணயச் செலவாணியில் இருந்தது. இதற்காக உள்நாட்டுச் சுழிப்பணம் அல்லது சுழிச்சக்கரத்திற்கு மாற்றிக் கொள்ளும் நாணயச் செலவாணி நிலையங்களை இந்த மன்னர் நிறுவியிருந்தார்.
சேதுநாட்டு இஸ்லாமியர் எதிர்க்கரையில் உள்ள இலங்கை மற்றும் கீழ்த்திசை நாடுகளிலும், உள்நாட்டிலும் வாணிபத்தைப் பெருக்கச் சலுகைகளை செய்து கொடுத்தார். சேது நாட்டு சங்கு வங்கத்திற்கும், அரிசி, நெல், இலங்கை, புதுச்சேரிக்கும் அனுப்பப்ட்டன. கேரளத்து மிளகும் கொப்பரையும் சேது நாட்டில் விற்பனையாயின.
சேதுநாட்டு அரிசி, கருப்புக்கட்டி, எண்ணெய், கைத்தறி ஆகியவைகளின் விற்பனைள்கௌ அரசுத்தரப்பில் வியாபாரத்துறை ஒன்று தனியாகச் செயல்பட்டது.
அடிக்கடி சேதுநாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்த வறட்சியை நிரந்தரமாக ஒரீக்க ஒரு திட்டத்தை தீட்டினார். மதுரைச் சிமை வருஷநாட்டில் உற்பத்தியாகி இராமநாதபுரம் சீமையில் நுழைந்து கிழக்குக் கடற்கரையில் சங்கமமாகும் வைகை ஆற்றின் ஒரு பகுதி நீர் வருஷநாட்டு மலையில் உள்ள ஒரு பாறையால் தடுக்கப்பட்டு, கிழக்கே வருவதற்குப் பதிலாக மேற்கே சென்று கேரளக் கடலில் வீணாவதைத் தடுத்து ஆற்றின் முழுநீரையும் மறவர் சீமைக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் அது.
இவ்விதம் நாட்டின் நலனையும், பொரளாதார முன்னேற்றத்தையும் பெருக்கும் வகையில் இந்த அளம் மன்னர் ஈடுபட்டிருக்கும் காலத்தில் தமிழக அரசியலில் அவர் எதிபாராத திருப்பம் எழுந்தது. இது மனனரது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது மட்டுமல்லாமல், தமிழகத்தின் அரசியலில் வெள்ளைப் பரங்கியரது ஆதிக்கத்திற்கு வலுவான அடித்தளமாக ஏகாதிப வளர்ச்சி உருவாக, அந்தத் ப்பம் திiமாறியது.
ஆற்காடு நவாபின் இறையான்மைக்கு உட்பட்ட தமிழகத்தில், அவரது சலுகைகளை எதிர்பார்த்துத் தங்களது கணிகத்தைத் தொடர்ந்து வந்த வெள்ளையர், கும்பெனியாரிடம் கடனாளியாகிவிட்ட ஆற்காடு நவாப்பிற்கு நிபந்தih விதித்து ஆட்டிவைக்கம் சூத்திரநாயகிவிட்டனர். நவாப்பின் அதிகாரத்தைப் பாளையக்காரர்களிடம் அமல்படுத்தத் தங்களது கூலிப் படையைக் கொடுத்து உதவிய கும்பெனியாருக்கு நன்றிக்கடனாக முதலில் கி.பி. 1783-இல் செங்கை மாவட்டத்தை விட்டுக் கொடுத்தார் நவாப். அடுத்து திருநெல்வேலி சீமையில் நிலத்தீர்வை ளை நவாப்பின் சார்பாக வசூலிக்கும் உரிமை பெற்றனர். பின்னர் தென்னகத்தில் நவாப்பிற்குச் செலுத்த வேண்டிய வரவினங்கள் அனைத்தையும் வசூலித்துக் கொள்ளும் உரிமையையும், அதில் ஆறில் ஒரு பகுதியை நவாப்பிற்கு அளித்து விட்டு எஞ்சியதை நவாப்பின் கடக்காக வரவு வைத்துக் கொள்ளும் உரிமையையும் பெற்றனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்க் கோட்டை கொத்தளங்களையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றனர். மேலும் நவாப் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய பாக்கித் தொகையைத் குறிப்பிட்ட பத்து தவணை நாட்களுக்கு முன்னதாகச் செலுத்த வேண்டும். தவணைப்படி பணம் செலுத்தத் தவறினால் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, நெல்லுhர், வடஆற்காடு, பழநாடு, ஓங்கோல் சீமைகளின் வரி வசூலைக் கும்பெனியாரே மேற்கொள்ளலாம். இரண்டாவது தவணையிலும் தாமதம் ஏற்பட்டால் அந்தச் சீமைகளை கும்பெனியாரே நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம் என்ற சலுகைகளையும் பெற்றனர். இவைகளைத் தொடர்ந்து, மறவர் சீமையினை மூன்று ஆண்டுகால வசூலுக்கு ஒப்படைப்பில் பெற்றனர்.



முதுகுளத்தூர் கலவரம்--1

முதுகுளத்தூர் தாலுகாவில், 1957-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கிராமங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், பார்வர்ட் பிளாக் கட்சிக்கும் பகைமை உணர்ச்சி காரணமாக, பல வேண்டாத செயல்கள் நடைபெற்றன. கலவர சூழ்நிலை ஏற்பட போகும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுபடுத்தி, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று, அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ். சசிவர்ணத் தேவர் ஜில்லா அதிகாரிகளிடம் முறையிட்டார்
அதையொட்டி இருதரப்பினரிடையே ஒரு சுமூக நிலையை ஏற்படுத்தி, வேண்டாத விளைவுகளைத் தடுக்கும் நோக்கத்தில், ஜில்லா கலெக்டர் இ.வி.ஆர்.பணிக்கர் ஒரு சமாதான மாநாட்டுக்கு ஏற்பா செய்தார். அந்த மாநாடு 1957 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி முதுகுளத்துhர் தாலுகா ஆபிசில் நடைபெற்றது.அந்த மாநாட்டில் தென் மண்டல போலிஸ் ஐ.ஜி. ராமநாதபுரம் ஜில்லா எஸ்.பி., டி. எஸ்.பி., ட்யூட்டி சூப்ரெண்ட், ஆ.டிஒ. ஆகியோர் அதிகாரிகள் தரப்பிலும், ஸ்ரீவில்லிபுத்துhர் பார்லிமெண்ட் உறுப்பினர் உ. முத்துராமலிங்கத்தேவர், சட்டசபை உறுப்பினர்கள் டி. எஸ். சசிவர்ணத் தேவர், சிவகங்கை டி. சுப்பிரமணிய ராஜா, அருப்புக்கோட்டை எம்.டி.ராமாசாமி, திருவாடனை கே.ஆர். எம். கரியமாணிக்கம், ஜில்லா போர்டு உறுப்பினர்கள் பா.ரா. நவசக்தி, டி. முத்துசாமித் தேவர் ஆகியோர் பார்வர்ட் பிளாக் கட்சி தரப்பிலும் -கமுதி பஞ்சாயத் போர்டு தலைவர் சௌந்திரபாண்டி நாடார், பேரையூர் வி.எம்.எஸ். வேலுசாமி நாடார், முதுகுளத்தூர் அருணகிரி, இராமநாதபுரம் சேதுபதி சகோதரர்கள் காசிநாத துரை, சிதம்பர நாத துரை ஆகியோர் காங்கிரஸ் கட்சி தரப்பிலும்,சாத்தையா, பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த இமானுவேல், பேரையூர் பீட்டர் ஆகியோர் அரிஜனத் தரப்பிலும் கலந்து கொண்டனர்.கம்யூனிஸ்ட் கட்சி அனுமதி கேட்டும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் தலைமை வகித்தார். முதலில் பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்களைத் தனி அறைக்கு அழைத்து, அவர்கள் கூறிய விளக்கங்களைக் கேட்டுக் கொண்டார். பிறகு காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளையும், அரிஜனப் பிரதிநிதிகளையும் அழைத்து விவரங்களைக் கேட்டார்.பின்னர் பொதுவான நிலையில் எல்லாத் தரப்பினர் முன்னிலையிலும் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டை ஆரம்பித்து வைக்க கலெக்டர் இ.வி.ஆர்.பணிக்கர் பேசியதாவது :" இந்தத் தாலுகாவில் இருதரப்பினரின் வேறுபாட்டால் நடந்து வரும் நிகழ்ச்சிகளை எல்லோரும் அறிவீர்கள்.
மறவர்கள், நாடார்கள், அரிஜனங்கள் இதர வகுப்பினர் அனைவரும் கடந்த கால சம்பவங்களை மறந்து, எல்லோரும் ஓரினம் என்ற மனோபாவங்கொண்டு ஐக்கியமாக வாழ வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்."
"இந்த ஜில்லாவின் தலைமை அதிகாரி என்ற முறையில் இவ்வட்டாரத்தில் அமைதி நிலவச் செய்யவும், எல்லோரையும் வேறுபடின்றி வாழ்விக்கச் செய்யவும். எனக்குள்ள கடமையை உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறேன்." "எந்த வகுப்பாரும் சட்டத்திற்குப் புறம்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு, தங்கள் குறைகளைச் சட்டபர்வமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரும் சட்டத்தையும் ஒழுங்கையும், மதித்துச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜில்லா கலெக்டர் பேசி முடித்தார்.

பின்னர், உ. முத்துராமலிங்கத்தேவர் எம்.பி. பேசியதாவது : "இத்தாலுகாவின் மறவர்களுக்குச் சொந்தமான ஆடு, மாடு போன்ற உடைமைகள் ஆயிதங்களால் பயமுறுத்தி அபகரிக்கப்படுவதற்கு அரிஜனங்களைத் தூண்டி விட்டு உற்சாக மூட்டுவதற்கான முழுப்பொறுப்பும் காங்கிரசையே சேரும். மறவர்கள், யாதவர்கள், சேர்வைக்காரர்கள், நாயுடு இனத்தார் ஆகியோரை காங்கிரஸ்காரர்களால் தூண்டி விடப்பட்ட அரிஜனங்கள் பலவந்தமான முறையில் பெண்களை அலைகழிப்பது போன்ற பல இன்னல்களுக்கு இலக்காகி வருகிறார்கள். இச் செயல்களால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட மேற்குறித்த இன மக்கள், தங்கள் பூர்வீக கிராமங்களிலிருந்து பாதுகாப்பிற்காக, பக்கத்துக் கிராமங்களுக்கு, வீடு, வாசல், உடமைகளையெல்லாம் அப்படி அப்படியே விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். இதனால் அவர்களது விவசாயமும் கெட்டு, வாழ்க்கை நிலையும் சீரழிந்து விட்டது. இது போன்ற சட்டவிரோத செயல்களால், இதுவரை கிட்டதட்ட நுhறு குடும்பங்களுக்கு மேல் மிகவும் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கொடுமைகளுக்கு இலக்கானவர்கள் போலிசில் புகார் செய்தும் புண்ணியம் இல்லை. இதுவரை எத்தனையோ புகார்கள் செய்யப்பட்டதில் போலிஸ் தரப்பிலிருந்து எவ்விதப் பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை".
"அதற்குப் பதிலாக, காங்கிரசைச் சேர்ந்த அரிஜனங்கள், நாடார்கள் பக்கமே சாதகமாக இருந்து வருவதாகத் தெரிகிறது. இந்தக் கட்டத்தில் மற்றொரு சம்பவத்தை இக்கூட்டத்தில் கலெக்டர் அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்." சமீபத்தில் பேரையூர் என்ற கிராமத்தில் வெடி விபத்துச் சம்பவம் ஒன்று நடைபெற்து. அதில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த மூக்க நாடார் என்பவர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டதாகக் கூறி, அதன் உண்மை அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது. பயங்கரமான அந்த வெடி விபத்தில் செத்தது மூக்க நாடார் மட்டுமல்ல, மேலும் சிலர் செத்திருப்பதாகத் தெரிகிறது. அப்பயங்கர வெடிகள், அரசாங்க லைசென்ஸ் இன்றி தயாரிக்கப்பட்டவை. அத்தனையும் மூடி மறைக்கப்பட்டு விட்டது." ஆனால், இம்மாதிரி சம்பவத்தில் மறவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், நடவடிக்கைகளை வேறு வழியில் திருப்பி, கடுமையாக்கி, பிரமாதமாக பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கும். கை வெடிகுண்டுகள் செய்வதில் தேர்ச்சி பெற்ற மூக்க நாடாரை, அருப்புக் கோட்டையில் இருந்து பேரையூருக்குக் கூட்டி வந்து, காங்கிரஸ் தரப்பினர் வெடிகள் தயாரிக்கச் செய்ததன் நோக்கம் பட்டவர்த்தனமானதாகும். இதோடு காங்கிரஸ் தரப்பினர்களில், ஒரு பாவமும் அறியாத அரிஜனங்கள் கலவரங்களுக்குத் தயார் செய்யப்படுகிறார்கள். இது தவிர, ராமநாதபுரம் ஜில்லா போலிசுக்குச் சொந்தமான மோட்டார் லாரி ஒன்றின் மூலம் மூங்கில் கம்புகளும் தடிகளும் கடலாடிக்கு அருகே உள்ள காவக்குளம் கிராமத்தில் உள்ள அரிஜனங்களுக்கும் காங்கிரஸ் தரப்பினர்களுக்கம் விநியேகிக்கப்பட்டு இருப்பதை கலெக்டர் அவர்களின் கவனத்திற்கும் போலிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மேலும் பலவித ஆயுதங்களும் வேறு ஊர்களில் இருந்து விநியோகிக்கப்படுகின்றன. உணவுப் பொருள்கள் அரிஜனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதெல்லாம் அரசாங்க விநியோகம் என்று பகிரங்கமாகவே கூறுகிறார்களாம் இதனால், அரிஜனங்கள், காரணமின்றி மறவர்களை இழுத்துத் தாக்க வசதிப்படுகிறது. அதே சமயம் அரிஜனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்ற தெம்பு ஒரு தரப்பில் ஏற்படுகிறது." "காங்கிரஸ் தரப்பினர்களும், போலிஸ் தரப்பினரில் சிலரும் அரிஜன வாலிபர்களை ஏவி விட்டு, தாழ்த்தப்பட்டோருக்குச் சம உரிமை என்ற அடிப்படையில், கிராமப் பொது கிணறுகளில் தண்ணீர் மொள்ளச் செல்லும் மறவர் குலப் பெண்கள் அவமானப்படும்படியான முறையில் செய்ய வைப்பதால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள மறவர்கள் மிக மிக மனம் நொந்து சட்டத்திற்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள்" என்று தேவர் கூறி முடித்தார்.

காங்கிரஸ் தரப்பு நாடார்கள் சார்பில், பேரையூர் வி.எம்.எஸ். வேலுக்காமி நாடார், "மறவர்கள், நாடார்களுக்கு எதிராகப் பொது நிதி திரட்டி வருகிறார்கள். நாடார் கடைக்ளில் சாமான்கள் வாங்க விடாமல், மறவர்களை மறியல் செயயச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று கூறினார். இதை மறுத்து தேவர், "இந்தப் புகார் உண்மை அல்ல, குறிப்பிட்ட கிராம மக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு இருக்கிறது. அவ்வழக்கை நடத்துவதற்காக அக்கிராம மக்கள் தங்களுக்குள் பொதுநிதி வசூலித்தார்கள். இது தவிர, நாடார் கடைகளில் சாமான் வாங்கக் கூடாது என்று மறவர்களால் கட்டுப்பாடு செய்யப்பட்டதாகவோ, மறியல் செய்யப்பட்டதாகவோ ஏதேனும் புகார் இருந்தால், உடனே அதை மாற்றுவதற்கான ஏற்பாட்டை நானே செய்து, அந்த மறியலைத் தடுக்கிறேன். ஏதேனும் அம்மாதிர் புகார் உண்டா? என்று கலெக்டர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்று கூறினார்.

"அம்மாதிரி மறவர்கள் மீது எவ்விதப் புகாரும் இல்லை. நாடார்கள் தரப்பு புகாருக்கு ஆதரவான வகையில் ஒன்றும் பதிவாகவுமில்லை என்று கலெக்டர் கூறினார்.

பிறகு அரிஜன தரப்பில் கலந்து கொண்ட பேரையூர் பீட்டரும், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த இமானுவேலுவும் பேசியதாவது :"அரிஜனங்களின் முன்னேற்றத்திற்கு எதிராக மறவர்கள் இயங்கி வருகிறர். இதர ஜாதி இந்துக்கள் மாதிரி அரிஜனங்கள் புது உடை தரித்து, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மறவர்கள் விரும்புவதில்லை என்று கூறினார்.

அவர்களின் கூற்றுக்குப் பதில் அளிக்கும் முறையில் தேவர் கூறியதாவது : அரிஜன முன்னேற்றத்தில் எல்லோரையும் விட அதிக அக்கறை கொண்டவன் நான். ஜாதி பேதத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்ட சிலரில் நான் முதன்மையானவன். ஜாதி, பேதத்தை ஒழிப்பதற்காக 1932-ஆம் ஆண்டில் ஒரு அரிஜனது வீட்டில் போய்ச் சாப்பிட்டேன். திரு. வேலுச்சாமி நாடார் வீட்டிலும் சாப்பிட்டிருக்கிறேன். அதற்கு முன் நாடார்களின் வீடுகளில் மறவர்கள் சாப்பிடுவதில்லை. என்னைத் தொடர்ந்து இந்த ஜாதி வேற்றுமை வேரற்றுப் போகட்டும் என்பதற்காகவே, நான் முதன் முதலில் நாடார் வீட்டிலும் அரிஜன் வீட்டிலும் சாப்பிட்டு வழிகாட்டினேன். மேலும், வித்தியாசம் மிகுந்திருந்த கமுதி போன்ற இடங்களில் உள்ள கோவில்களை, அரிஜனங்களுக்குத் திறந்து விடுவதில் நான் முன்னின்று பாடுபட்டவன் என்பது எல்லோருக்கும் தெரியும். இது தவிர, காங்கிரஸ் மாதிரி பார்வர்ட் பிளாக் அரிஜன உயர்வுக்கத் தன்னை அர்பணித்துக் கொண்ட கட்சியாகும். உதாரணமாக, பார்வர்ட் பிளாக் சார்பில் நின்ற அரிஜன அபேட்சர்கருக்கு தான் அரிஜனங்களும் மறவர்களும் இதர இனத்தார்களும் பெருமளவு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்து வருகிறார்கள். சமீபத்தில் தேர்தல்களில் இது நிதர்சனமாகி இருக்கிறது. இந்நிலையில் அரிஜன உயர்வுக்கு மறவர்கள் எதிர்ப்புப் புரிகிறார்கள் என்று குறை கூறுவது அழகல்ல" "மேலும், அரிஜன உயர்வு என்பது ஒரே இரவில் சாத்தியமானதல்ல. இருதரப்பிலும் நாளடைவில் பரஸ்பரம் மனமாற்றம் அடைய வேண்டும். தாழ்த்தப்பட்டோர் உயர்வு என்றால், மறவர், யாதவர், நாயுடு போன்ற ஜாதி இந்துக்களின் இளம் பெண்களிடம் விஷமம் புரிவதும் அல்ல. அம்மாதிரி எல்லாம் அரிஜனங்கள் மோசமான முறையில் தூண்டி விடப்படுவதால் தான் இந்த முறைகேடுகள் சம்பவிக்கப்படுகின்றன என்று கூறி முடித்தார் தேவர்.

கடைசியாக மாவட்ட கலெக்டர், கடந்த கால ஐக்கிய பேத உணர்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் எல்லா தரப்பினருமே மறந்து, பொது விவகாரங்களில் ஒழுங்கையும் மதித்துக் கடைபிடித்து, இத்தாலுகாவில் அமைதியை நிலை நாட்டி, எல்லோரும் சுமூகமாக இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் வாழ வசதி செய்ய ஆவன செய்யப்படும் என்று கலெக்டர் கூறினார்.

(அரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ஆறுமுகமும், பார்வர்ட் பிளாக் சட்ட மன்ற உறுப்பினர் எ.பெருமாளும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.)

பின்னர் கலெக்டர், எல்லாத் தரப்பு தலைவர்களும் ஒன்றுபட்டு, இந்தப் பிராந்தியத்தின் முக்கியமான கிராமங்களுக்குப் போய் பொதுக் கூட்டம் போட்டு, ஒரே மேடையில் பேசினால், இந்தத் தாலுகாவின் சுமுக நிலைமைக்கு மிகமிகப் பயன் உள்ளதாக இருக்கும். சமாதான மாநாடு வெற்றி பெற்றதாகவும் அமையும் என்று கூறினார். இந்த யோசனைக்கு தேவர் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால், நாடார்கள் மறுத்து விட்டனர். முடிவில், இப்பிராந்தியத்தில் வாழும் எல்லா இன மக்களிடையே சமதானத்தையும், அமைதியையும் நிலைநாட்ட ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க முயற்சி எடுத்த கலெப்டருக்கு நன்றி கூறினார். எல்லாரிடமும் ஐக்கியத்தை உண்டாக்கும் வகையில் அதிகாரிகளுடன் முழுமனதுடன் ஒத்துழைப்பதாய் தேவர் உறுதி கூறினார்.மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் கலெக்டர். அனால், மாநாடு முடிந்த மறுநாளில் …..

கீழத்தூவல் படுகாலை சமாதான மாநாடு முடிந்த மறுநாள் கொடிய செய்தி ஒன்று காட்டுத் தீ போலப் பரவி வந்து மக்களின் நெஞ்சங்களில் பேரிடியாக விழுந்தது. அப்படியென்ன செய்தி, சமாதான மாநாடு முடிந்த மற்றநாள் 1957 செப்டம்பர் 11 -ம் நாள் இரவு, பரமக்குடியில் காங்கிரஸ்காரரான இமானுவேல் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி தான் அது. செப்டம்பர் 13 -ம் நாள் அருங்குளம் என்ற கிராமத்தில் நாடகம் பார்ப்பதில் கலகம் மூண்டது. இந்த இரு சம்பவங்களும் முதுகுளத்தூர் தொகுதிக்கு வெளியில் நடந்தவை. இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக பெரும் கலவரம் முதுகுளத்தூர் தொகுதியில் ஏற்படும் என்று காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்பர்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அதனால் ஏமாற்றம். இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட போஸ் உட்பட பெரிய போலிஸ் அதிகாரிகளைக் கலந்து பேசினார்.

தானாக ஏற்படாத கலகத்தை சதி ஆலோசனை செய்ய. அதன் விளைவு, ஈவிரக்கமற்ற கொலை பாதகன், கல்நெஞ்சன், ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் ரே என்பவனையும், போலிஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் ரே அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான். முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்ட ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை கொடும்பாவி இன்ஸ்பெக்டர் ரே தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான். அங்கே! கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ ? என்று அறியாமல் கைகளும் கால்களும் கண்களும் கட்டப்பட்டிருந்த கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் …..துப்பாக்கியின் டுமீல் டுமீல் கத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர்.என்ன நடந்த அங்கே?இன்ஸ்பெக்டர் ரே, அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் டுமீல் டுமீல் என்று சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த வீரத்தியாகிகள் பிணமாக, ரத்த வெள்ளதிதில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது.

அந்த ஐந்து இனைஞர்கள் செய்த குற்றம் என்ன? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை ? தேவரைத் தலைவராக, இதய தெய்வமாக, ஏற்றுக் கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த குற்றத்க்காகத் தான், அந்த ஐந்து இளைஞர்களையும் சுட்டுப் பொசுக்கினார்கள்.இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.இறந்த ஐந்து இனைஞர்களின் உடவ்களை உடனே பரமக்குடிக்குக் கொண்டு போய், பிரேத சோதனை நடத்தி போலிசாரே எரித்து விட்டனர், இதுதான் என்றைக்கும் அனைவரும், குறிப்பாக தேவர் குல மக்கள் மறக்க முடியாத கீழத்தூவல் படுகொலையாகும்.

கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலிசின் காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற கிராமத்திற்குள் போலிஸ் வெறிப்பட்டாளம் நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திடிரெனப் போலிஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை விட்டுவிட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர். அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன் என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு தரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார். மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலிஸ் லாரியிலேயே வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, " உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்" என்று அவர்களிடம் போலிசார் கூறினர். அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலிசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.

போலிஸ் வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்? மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர். கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர்.

இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 பொய் வழக்குகள் போனர். இத்தனைக்கும் மேலாக, உத்தமத் தலைவராம் தேவர் மீது கொலை வழக்குப் போட்டனர். தேவரின் செல்வாக்கைக் குறைக்கக் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தேவரின் மீது குற்றப்பட்டியல் 1952 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தேவரின் வளர்ந்து வந்த செல்வாக்கும் பர்வர்ட் பிளாக் குறித்த வெற்றிகளும் காங்கிரஸ் வட்டாரத்தில் தேவரின் மீது ஒரு பகைமை தோன்றக் காரணமாக அமைந்ன. தேவரின் செல்வாக்கு, அவரது கட்சியின் வளர்ச்சி, வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், தேவருக்கு எதிராக குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கியது. தேவரின் நடவடிக்கைகள், அவரது மேடைப் பேச்சுக்கள் கண்காணிக்கப் பட்டன. இந்நிலையில் 1957 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் நாள் மதுரையில் தமுக்கம் திடலில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை, இந்த தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சியாக, அமைப்பு ரீதியாக உருவாக்க, மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டைத் திறந்து வைத்து தேவர் மூன்று மணி நேரம் பேசினார். இந்திய மக்களின் தொன்மை மிக்க பண்பாட்டுப் பாரம்பரியம், வீரம், விவேகம் போன்றவை பற்றியும், வாணிபம் செய்ய வந்த வெள்ளையன் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவை வளைத்துப் போட்டதைப் பற்றியும் விரிவாக தேவர் தனது உரையில் எடுத்துரைத்தார். காங்கிரஸ் ஆட்சியின் அராஜக அலங்கோல ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தார். அவரது பேச்சு ஒரு சரித்திர நிகழ்ச்சியாக அமைந்தது. மறுநாளும் மாநாடு நடைபெற்றது. தேவர் முதல் நாள் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிவிட்டு அன்று இரவு 10 மணி அளவில் காரில், தனது இருப்பிடமாகிய நேதாஜி ஆபிசிற்குச் சென்று கொண்டிருந்தார். வைகை ஆற்றுப் பாலத்தில் தேவரது கார் வந்த போது போலிசார் காரை நிறுத்தி தேவரை கைது செய்தனர்.

தேவர் சிறிதும் பதற்றப்படாமல், தான் அணிந்திருந்த ருத்ரதட்ச மாலையை, உடனிருந்த ஜனநாயக காங்கிரஸ் தலைவர் டி.ஜி. கிருஸ்ணமூர்த்தியிடம் கொடுத்து விட்டு, "மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். அஞ்ச வேண்டாம். சத்தியம் வெல்லும்" என்று கூறிவிட்டு, போலிஸ் வேனில் ஏறிக்கொண்டார். போலிஸ் வேன் பலத்த பாதுகாப்புடன் பறந்தது.


முதுகுளத்தூர் கலவரம்--2(அகமுடையார்,மறவர்,கள்ளர்)


மதுரை சிறையில் அடைக்கப்பட்ட தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் பின்வருமாறு :
உ . முத்துராமலிங்கத் தேவர் எம்.பி. கடந்த பல வருடங்களாக ஆட்சேபகரமான பிரசங்கங்கள் மூலமும் வகுப்பு உணர்ச்சியை கிளறி வருவதோடு, மக்களைப் பலாத்கார சம்பவங்களுக்குத் துண்டி விட்டு வந்திருக்கிறார். கீழே கண்ட சம்பவங்கள் அதற்கான ஆதாரங்களாகும்

1. 12-5-1956-ல் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஸ்ரீதேவர் பேசிய போது, இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தியா, பிரிட்டன் காமன் வெல்த் உறவிலிருந்து விலகிவிட வேண்டும். தவறினால் காங்கிரஸ் கட்சியை இந்தியாவின் ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற அகில இந்திய ரீதியில் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று பார்வர்ட் பிளாக் சார்பில் இந்தியப் பிரதமருக்கு அறிவிப்பாகக் குறிப்பிட்டார். பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அவர் ஸ்தல தலைவர்.


2. 17-4-1957-ல்அவர் சாயல்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது, நெறிதவறிய வியாபாரத்தின் மூலம் நாடார்கள் பெரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள். பொது மக்கள் யாரும் நாடார்களோடு எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களது கடைகளில் சாமான்கள் வாங்குவதையும் நிறுத்தி விடுங்கள். கடந்த ஜூலை மாதக் கடைசியில் விருதுநகரில் ஒரு சதி உருவாகி இருக்கிறது. நாடார் இனத் தலைவர்கள் இரகசியமாகத் கூடி, அக் கூட்டத்தில் அரிஜனங்களின் ஒரு பகுதியினனைரைக் கூட்டிப் போய் அவர்களை மறவர்களோடு மோதும்படி போதித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

3. 1957 ஆம் ஆண் ஜூன் 14-ல் அபிராமம் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தவறான முறைகள் மூலம் எனக்கு எதிராகப் போலிஸ் எதுவும் செய்தால், போலிசார் செய்யும் முறைகளின் படியே அவர்களுக்குப் பதில் அளிக்கப்படும் என்று போலிஸ் அதிகாரிகளை எச்சரித்தார்.

4. 1957 ஆம் ஆண்டு ஜூன்மாதம் 10ஆம் தேதி திருப்புவனம் புதூரில் நடந்த ஒரு பொக்கூட்டத்தில் பேசும் போது, எனது தொகுதியில் எனக்குச் செல்வாக்கு இல்லை என்று காட்டுவாற்காகக் காங்கிரஸ்காரர்கள் பொறுக்க முடியாத பல அக்கிரம வழிகளைக் கையாளுகிறார்கள். அந்த அக்கிரமங்கள் அளவுக்கு மீறி வருமானால், காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரிலே ஒரு மூன்றாவது உலகப்போரைத் தொடங்க நான் தயாராக நேரும் என்று பயமுறுத்திப் பேசினார்.

சமீபத்தில் முதுகுளத்தூர் தாலுகாவில் ஹரிஜனங்களுக்கும் மறவர்களுக்குமிடையே வளர்ந்தோங்கி வரும் வகுப்பு வளர்ச்சிக்கு அவரின் நடவடிக்கைகளே பொறுப்புகள் என்பதற்கான ஆதாரங்கள் பின்வருமாறு:-

1. 1957 செப்டம்பர் 10-ல் இராமநாதபுரம் கலெக்டரால் முதுகுளத்தூரில் ஒரு சமாதான மாநாடு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் அரிஜனங்கள் சார்பில் ஸ்ரீ இமானுவேல் பேசினார். தமக்குச் சமமாக இமானுவேல் என்பவர், அரிஜனங்களுக்காகப் பேசுவது கேவலம் என்ற முறையில் குறிப்பிட்ட தேவர், மாநாடு முடிந்து வெளியே வந்து, " இமானுவேலை இவ்வளவு முக்கியத்துவம் பெற எப்படி அனுமதித்தீர்கள்? " என்றும் எனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் தம்மைப் பின்பற்றுவோரைப் பார்த்துக் கேட்டார்.

மறுநாள், அவரைப் பின்பற்றும் ஒரு பகுதி தேவர்களால் திரு இமானுவேல் கொலை செய்யப்பட்டு விட்டார். கொலை செய்தவர்களில் ஒருவர், கொலை செய்யும்போது, தேவரை எப்படி எதிர்த்துப் பேசலாம்? என்று கேட்டுக் கொண்டே கொன்றார்.

2. செப்டம்பர் 16-,ல வடக்கம்பட்டியில், ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய திரு. தேவர், முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளில் வகுப்புக்கலவரம் மூளுவதற்கான உணர்ச்சிகள் வேகப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டதோடு, காங்கிரஸ்காரர்கள் சண்டையிடுவதற்குத் தவறான இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும், அப்பகுதி மக்கள் மாவீரம் கொண்டவர்கள். பிரிட்டன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே, அவ்வாட்சியின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பயப்படாமல் எதிர்த்து நின்றவர்களென்றும், அப்பகுதி மக்கள் போலீசுக்கோ, விசேடப் போலீசுக்காங்கிரஸ்காரர்கள் , இராணுவத்திற்கோ பயப்படத் தேவையில்லை என்றும், நிலைமையை அடக்கப் பலாத்காரம் மூலமே சர்க்காருக்கு பதில் அளிக்கப்படும் என்றும், இந்த நாட்டில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, மக்கள் ஆயுதம் ஏந்தத் தயங்க வேண்டாமென்றும், உள்நாட்டுப் போரை நடத்தும்படியும் பேசினார்.

3. செப்டம்பர் 16-ல் வடக்கம்பட்டியில், கொலை ஆயுதப் போராட்டம், வேல் கம்பு தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் பெருத்த அளவில் நடைபெற்றன.

முதுகுளத்தூர், பரமக்குடி, கிவகங்கை, அருப்புக்கோட்டைத் தாலுகாவைச் சேர்ந்த கீழ்க்காணும் கிராமங்களில் நடந்த சம்பவங்கள் வருமாறு :-

1. செப்டம்பர் 17-ல் ஆயிரம் பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய மறவர் கூட்டம் ஒன்று, புத்தம்பல் கிராம அரிஜன வீடுகளுக்குத் தீயிட்டு விட்டு வீராம்பல் கிராமத்துக்கு அணி வகுத்துப் போய், அங்கே பாதுகாப்புக்காக இருந்த ஒரு எஸ்.ஏ. பி. போலிசைத் தாக்கியது. போலிசார் தற்காப்புத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மறவர்கள் இருவருக்குக் காயம். சிலர் மடிந்தனர். 72 பேர் கைது செய்யப்பட்டு, ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

2. செப்டம்பர் 18-ல் மாலை 4 மணி சுமாருக்கு, மறவர் கூட்டம் ஒன்று, தாத்தாக்குடி கிராமம் அரிஜனங்களின் வீடுகளுக்குத் தீயிட்டது.

3. செப்டம்பர் 19-ல் அருப்புக் கோட்டை தாலுhகா நரிக்குடி போலிஸ் சரகத்தை சேர்ந்த நாலுhர் கிராமத்தில் மறவர்கள், அஜனங்களின் வீடுகளுக்கத் தீ வைத்தனர்.

4. அன்று மாலை மார் 500 மறவர்கள் சிவகங்கைத் தாலுhகாவைச் சேர்ந்த திருப்பாச்சேத்தி அரிஜன வீடுகளுக்கத் தீயிட்டனர்.

5. அதே நாள் இரவு 10 மணி சுமாருக்கு, முன்னணிப் போலிசுப் படையினர், பெரும்பச்சேரி கிராம அரிஜன வீடுகள் எரிந்து கொண்டிருந்ததையும். 100 பேர் கொண்ட மறவர் கூட்டத்தால், அரிஜனங்கள் தாக்கப்படுவதையும் பார்த்து, தற்காப்புக்காக ஒன்பது ரவுண்டு சுட்டனர்.

6. அதே இரவு ஆயுதம் தாங்கிய மறவர் கூட்டம் ஒன்று, நரிக்குடி போலிஸ் சரகத்தைச் சேர்ந்த கிராமங்களில் தீயிடச் சென்ற செய்தி கிடைத்தது. கமுயீத போலிஸ் இன்ஸ்பெக்டர் உளுத்திமடை கிராமத்திற்குச் சென்று, ஆயுதஙகளைக் கீழே போடும்படி மறவர்களுக்குக் கட்டளையிட்டார். மறவர்கள் போலிசாரைத் தாக்கினர். போலிசார் கூட்டத்தில் நான்கு பேர் செத்தனர். பதினைது மறவர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

7. செப்டம்பர் 20-ல் காலை 6 மணிக்கு இளம்செம்பூரைச் சேர்ந்த கிட்டதட்ட 200 மறவர்கள் பயங்கர ஆயுதங்களுடனும், நாட்டுத் துப்பாக்கிகளுடனும் ஒரு மைல் தொலைவில் உள்ள வீராம்பல் கிராமத்திற்குச் சென்று, அரிஜனவீடுகளுக்குத் தீ வைத்து, அவர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். அரிஜனங்கள் அங்கு இருந்த மாதா கோவிலுக்குள் அடைக்கலம் புந்தனர். மறவர்கள் மாதா கோயில் ஜன்னல்களை உடைத்து, தீ வைத்து மூவரைக் கொன்று, முப்பத்தாறு பேர்களைக் காயப்படுத்தி விட்டனர்

8. அதே நாள் 500 பேர் கொண்ட மறவர் கூட்டம் ஒன்று, திருப்பாச்சேத்தி போலிஸ் சரகத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குச் சென்று, அரிஜனவீடுகளுக்குத் தீயிட்டு, உணவுப் பொருள்களையும், இதர பொருள்களையும் கொள்ளையிட்டனர். மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசேஷப் போலீஸ் படையுடனும் சென்று, மறவர்களை மழவராயனேந்தலில் சந்தித்து, ஆயுதங்களைக் கீழே போடும்படி உத்தரவிட்டனர். கட்டுப்பட மறுத்த மறவர்கள் போலீசைத் தாக்க முனைந்தபோது, போலீசார் ஆறு ரவுண்டு சுட்டனர். அதன் பயனாய் ஒரு மறவர் சூடுபட்டு ஆஸ்பத்திரிக்குப் போகும் வழியில் இறந்து விட்டார்.

9. இம்மாதிரி குற்றச் செயல்களால், முதுகுளத்தூர் போலீசார் அடுத்துள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மறவர்கள் பலரைச் சந்தேகத்தின் பேரில் பல குற்றங்களுக்காகவும், சட்ட ஒழுங்கைக் காப்பதற்காகவும், கைது செய்தனர்.

இவைகளை அறிந்த திரு.தேவர், தமிழ்நாடு பத்திரிகை பிரதிநிதிகளிடம், தேவமார்களைக் கைது செய்து, குறிப்பாக எனது சொந்தக் கிராமமான பசும்பொன்னில் எனது சொந்த வீட்டிலிருந்த சமையல்காரனையும் உறவினர்களையும் கூடக் கைது செய்வதின் மூலம் சர்க்கார் என்னைச் சண்டைக்கு இழுக்கிறது' என்று கூறியிருக்கிறார். அவர் கூறியதில், அவர் சவாலை ஏற்கத் தயாராகும் எண்ணம் உள்ளடங்கி இருக்கிறது.

10. கீழ்த்தூவலில் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் சம்பந்தமாய் எஸ்.வெங்கடராமன் ஐ.சி.எஸ். விசாரணை நடத்தினார். இவ்விசாரணையைத் தாமோ, தமது கட்சியோ ஏற்கப் போவதில்லை என்று திரு தேவர் வாய்மொழியாகக் கூறியிருந்தும், விசாரணை நடந்த கட்டிடத்தின் வாயிலருகே ஒரு காரில் விசாரணையின்போது உட்கார்ந்திருந்தார். இதனால் அரிஜனங்கள் தைரியமாக கமிஷனிடம் வந்து தேவருக்கு எதிராகச் சாட்சியம் அளிக்க இயலாமல் போனது சாத்தியமாயிற்று. முதுகுளத்தூர் தாலுகாவிலும் அதை அடுத்த பகுதிகளிலும் உள்ள மறவர்கள் திரு தேவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது கண்கூடு, மேலும் இவ்வித சம்பவங்களிலிருந்து, திரு தேவர் தமது ஜனங்களைப் பலாத்கார நடவடிக்கைகளிலிருந்து தடுப்பதற்குப் பதிலாக பின்னணியில் இருந்து கொண்டு அரிஜனங்களுக்கு எதிராக தூண்டிவிட்டார் என்பது தெரிகிறது.

உ. முத்துராமலிங்கத் தேவர் தமது பகிரங்கப் பேச்சுக்களின் மூலமும், தம்மைப் பின்பற்றுவோருடன் இரகசிய ஏற்பாடுகள் செய்வதன் மூலமும், வகுப்புணர்ச்சியைக் கிளறிவிட்டு வருகிறார் என்பது தெரிகிறது. இதை இப்படியே தொடரவிட்டால், மேலும் பல வகுப்புக் கலவரங்கள் சட்ட விரோத செயல்களுக்கும் அவர் தமது சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடும். அந்த நிலைமை ராஜ்யத்தின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் பாதகமாக முடியும் என்பதால், அவர் தடுப்புக் காவல் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து, திரு தேவர் எழுத்து மூலம் விவரிக்க உரிமையுண்டு. அவ்வாறு அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்க அவர் விரும்பினால், அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள சென்னை சிறை சூப்பிரண்டட் மூலம் சென்னை சர்க்கார் காரியதரிசியிடம் அனுமதி கோரலாம். திரு. தேவர் மூலம் அனுப்பப்படும் எவ்வித பிரதிநிதித்துவத்தையும் சர்க்கார் உடனே அட்வைசரி போர்டு முன் வைக்கும். அட்வைசரி போர்டு முன் நேரடியாக வந்து விபரம் சொல்ல திரு. தேவர் விரும்பினால், அதன்படியும் செய்யலாம். தாம் அட்வைசரி போர்டு முன் ஆஜராகி, விளக்கமளிக்கத் தேவர் நிச்சயித்திருந்தால், அரசாங்கத்தின் தலைமைக் காரியதரிசிக்கு முன்கூட்டியே எழுதும்படி திரு தேவர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


முதுகுளத்தூர் கலவரம்--3

சி.எம்.பணிக்கர், அடிசனல் ஜில்லா மாஜிஸ்திரேட், இராமநாதபுரம் ஜில்லா; தேவர் மீது சர்க்கார் சாட்டிய மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு தேவர், சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன் அளித்த பதிலைப் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காண்போம்.

நான் எனது பகிரங்க சொற்பொழிவுகளாலும், என்னைப் பின்பற்றுவோர் மூலம் இரகசிய ஏற்பாடுகளாலும் வகுப்புணர்ச்சியைத் தூண்டி விட்டு, பலாத்காரச் செயல்களுக்கு வழி செய்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. துரதிருஷ்டவசமாக முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும், அதன் அடிப்படையில் எனது சொற்பொழிவுகளையும், நடவடிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கும் உள்ள பின்னணியை விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பின்னணியை விளக்குமுன், என் மீது சாட்டியுள்ள குற்றங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவைகளைப் பற்றிய வரையில் என் சம்பந்தம் எதுவுமே இல்லை என்பதையும் போர்டுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இவ்வருடம் மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கும் நான் போட்டியிட்டேன். அவ்விரு ஸ்தானங்களுக்கும் மக்கள் பெருவாரியான ஓட்டுக்களால் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கு 39 ஆயிரமும் வாக்குகளும், சட்டசபை ஸ்தானத்திற்கு 23 ஆயிரம் வாக்குகளும் அதிகமாகப் பெற்று நான் ஜெயித்தேன். இந்த இரட்டை வெற்றியின் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்தை நான் வைத்துக்கொண்டு, முதுகுளத்தூர் சட்டமன்ற ஸ்தானத்தை நான் ராஜினாமா செய்தேன். நான் காங்கிரஸ் கட்சிக்கு உறுதிமிக்கதொரு எதிர்ப்பாளன். அதிகாரம் வகிக்கின்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் 1946ல் விலகினேன். சமுதாய விடுதலைக்காகவும் சுதந்திர லட்சியத்திற்காகவும் போரிட்டு, பல துன்பங்களுக்கு ஆட்பட்டு தவித்த பலநூறாயிரம் மக்களின் உயிர்க் கொள்கையை, அதிகாரம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி கையாளவில்லை. காட்டிக் கொடுக்கவே துணிந்து விட்டது என்பதை உணர்ந்தேன். அதனால், அக்கட்சியிலிருந்து விலகினேன்.

அதன் பிறகு நடந்த தேர்தலில்களில் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியும் எனக்கு மாபெரும் வெற்றியும் கண்டு வருகிறது. எவ்வித ஆதரவையும் பெற முடியாத காங்கிரஸ்காரர்கள் தலைமையில் உள்ளவர்கள் உட்பட, சமீபத்தில் இடைத்தேர்தலில் என் ஆதரவு பெற்ற சசிவர்ணத்தேவரை முறியடிக்க சகல முயற்சிகளையும் செய்து பார்த்தார்கள். இம்மாதிரி, நான் நிறுத்திய அபேட்சகரைத தோற்கடிக்க காங்கிரஸ்காரர்கள் தீவிர ஏற்பாடுகள் செய்வதையோ, தமக்குச் சாதகமாகப் பேசுவதையோ எவரும் மறுக்க முடியாது; மறுக்கக் கூடாது. அது அவரவர் உரிமை, ஜனநாயகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தத்தம் கட்சி ஜெயிக்கப் பாடுபடத்தான் செய்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இகாங்கிரஸின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், அரசாங்கத் தரப்பினரும் வாக்காளர்கள பயமுறுத்திப் பேசுவதிலும், மறவர்களுக்கு எதிராக அரிஜனங்களைத் துhண்டி விட்டு, வகுப்பு உணர்ச்சியை வளர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு விட்டார்கள். சசிவர்ணத்தேவர் வெற்றி பெற்றால், பெரும் துன்பத்துக்கு ஆளாக நேரும்". என்று எனது ஆதரவாளர்களிடம் பயமுறுத்தி பேசி வந்திருக்கிறார்கள். அந்த பயமுறத்தலில் உள்நாட்டு மந்திரி பக்தவச்சலத்தின் பேச்சின் மூலம் உச்சிக்கே போய்விட்டது.

முதுகுளத்தூர் தொகுதியில் பல இடங்களில் ஜூன் 25-ஆம் தேதி பக்தவச்சலம் பொதுக் கூட்டங்களில் வாக்காளர்கள் பயந்து, குலை நடுங்கும்படியான முறையில் பேசியுள்ளார். மறவர் அல்லாத மைனாரிட்டி மக்கள் பெரும் துன்பப்படுவதாகவும், இதை எல்லாம் அடக்கி ஒடுக்கும் காலம் நெருங்கி விட்டதென்றும் பேசிய திரு. பக்தவச்சலம், சர்க்காரை கிருஷ்ண பரமாத்வாகவும், என்னைச் சிசுபாலனாகவும் வர்ணித்து காலத்துக்காக அமைதியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா, காலம் வந்தவுடன், தனது சக்ராயுதத்தால் சிசுபாலனை வதைத்தது மாதிரி, சர்க்காரும் என்னை வதைக்கும் என்று பேசியிருக்கிறார். அவர் பேசிய விபரம் பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது. இதனைப் பலரும் நன்கு தெரிந்து இருப்பார்கள். மேலும் அவர் என்னைத் தோற்கடித்து, எனது செல்வாக்கைக் குறைத்துவிடக் காலம் வந்து விட்டதென்றும், என்னைத் தோற்கடிப்பதற்காகப் பெரிய போலீஸ் படையை முழு அளவுக்கும் உபயோகிக்க முடிவு செய்து விட்டதாகவும் சவால் விடுத்துப் பேசியிருக்கிறார். அவரது பேச்சிலிருந்து அவர் தரப்பினால் விளைந்த நிகழ்ச்சிகளுக்கு என்னைப் பொறுப்பாக்கி இருக்கிறார்கள். மந்திரி பக்தவத்சலம் பேசிய பேச்சுக்களைப் பற்றி நான் கேள்விப்பட்டு, அவர் பேசியது உண்மைதானா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக 'இந்து' பத்திரிகை நிருபரிடம் மந்திரியின் பேச்சுக்குறிப்பு ஒன்று கேட்டேன். 'இந்து' நிருபரின் செய்தி இந்து பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அதன் நகல் ஒன்றை இத்துடன் போர்டின் பார்வைக்காக இணைத்து இருக்கிறேன்.

மந்திரியின் பேச்சிலிருந்து என் மீதும், நான் பிறந்த ஜாதியின் மீதும் வேண்டுமென்றே எவ்வளவு மோசமான முறையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்பதையும் ஜாதிவெறி எவ்வளவு பயங்கரமாகத் தூண்டிவிடப் பட்டிருக்கிறது? என்பதையும் குறிப்பாக, போலீஸ் பொறுப்பில் உள்ள உள்நாட்டு மந்திரியிடமிருந்த அந்த ஜாதித்துவேஷம் எவ்வளவு பக்குவமாய் அனல்கட்டி இருக்கிறது? என்பதையும் யூகித்துக் கொள்ளலாம்.மந்திரியின் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு வந்திருப்பதாய் உணர்ந்து, ஜுன் 27ல் திருச்சுழியில் நடந்த கூட்டத்தில் அதற்கு நான் பதிலளித்தேன். எனது திருச்சுழிப் பேச்சின் சுருக்கம் ஜுன் 28ம் தேதி தினமணி பேப்பரில் வெளியாகி இருக்கிறது. அந்த நகலையும் இணைத்திருக்கிறேன். "எதிர்தரப்பினரின் கோபமூட்டும் பேச்சுக்களில் ஆத்திரப்பட்டு, எவரும் எந்தச் செயல்களிலும், இறங்கிவிடவேண்டாம்" எவர் எதை எந்த முறையில் எந்த அளவுக்குப் பேசினாலும், மக்கள் அனைவரும் அமைதியாகவும், ஐக்கியமாகவும் இருக்க வேண்டுகிறேன். ஆத்திரம் வேண்டாம்" என்று எல்லா மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துத் திருச்சுழியில் பேசினேன். ஜுலை 1ல் வாக்கெடுப்பு நடந்தது. மக்கள் மறுபடியும் வாக்களிக்க வந்தனர். முந்திய மாதிரியே எனது அரசியல் கட்சிக்கு அமோகமான ஆதரவைத் தந்தார்கள். 24 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சசிவர்ணத் தேவருக்கு வெற்றியைக் கொடுத்தார்கள். முந்திய பொதுத் தேர்தலில் நான் பெற்ற வாக்குகளைவிட, இந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் அதிகம், மூன்று தேர்தலிலும் கிடைத்த ஓட்டு விபரப் பட்டியலையும் இதோடு இணைத்துள்ளேன். தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி வெளிவந்தது. இதன்பிறகு, தேர்தலுக்கு முன் திரு.பக்தவத்சலம் விதைத்த பயமுறுத்தல்கள் தளிர்த்து காய்த்துப் பழமாக ஆரம்பித்து விட்டது. அதன் மூலம் உருவாகிக் கொண்டிருந்த பயங்கரத்தை உணர்ந்தார்.

12-7-1957ல் கமுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மீண்டுமொரு முறை அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு, "எந்த வகையிலும் அமைதி இழந்து விடாதீர்கள், அமைதியோடு இருங்கள். வகுப்பு நெறி எந்த ரூபத்தில் வந்து மோதினாலும், அதில் சிக்கி விடாதீர்கள். எது வந்தாலும் அமைதியை இழந்து விடக்கூடாது" என்று கரங்குவித்து வேண்டிக்கொண்டேன். ஜூலை மாதத்தில் வெளிப்பகுதியினரின் தூண்டுதல் மீதும், போலிஸ் பாதுகாப்போடும் அரிஜனங்களால் முதுகுளத்தூர் தொகுதியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அச்சம்பவகள் அத்தனையும் எனது ஆதராவாளர்களை அலைகழித்து, தொல்லை கொடுத்தவைகள் ஆகும். அந்த நிலைமை முற்றிக் கொண்டு போவதைக் கண்ட எனது சகா சகிவர்ணத்தேவர், இராமநாதபுரம் ரெவின்யூ டிவிஷனல் ஆபிசரைச் சந்தித்து, அப்பகுதியில் உள்ள எல்லாக் கட்சி தலைவர்களையும் கூட்டி நிலைமை மேலும் மோசமாவதைத் தடுத்து, சாதி பிளவு உணர்ச்சிளை அகற்றி, ஐக்கியப்படுத்தி, சமாதானத்தை நிலை நாட்டுவதற்கான வகையில் ஒரு திட்டம் தயாரிக்கும்படி கோரி இருந்தார். நிலைமை கட்டுங்ககடங்காமல் வளருவதை அதிகாரிகளிடம் அறிவித்த பிறகும், நெருக்கடி நிலைமை கொஞ்சமும் தளராமல், அதன் போக்கில் ஓங்கி, மோசமான முடிவை எட்டிக் கொண்டிருந்திருக்கிறது, நிலைமையின் மோசத்தை விவரித்து எனது ஆதரவாளர்கள் அனுப்பிய மனுக்கள் ஏராளம். அமைதிக்கு, அதிகாரத் தலைப்பில் இருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனது ஆதரவாளர்கள் தம்மை நோக்கிச் சூழ்ந்து வரும் நெருக்கடிகள், நிலைமைகளை விவரித்து, அதிகாரிகளுக்கு அவ்வப்போது அனுப்பிய மனுக்கள் தேதி வாரியாக இதோடு சேர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 2-ல் சசிவர்ணத் தேவரும் மேலும் எனது தரப்பைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் ஐவரும், ஜில்லா கலெக்டரைச் சந்தித்து "நெருக்கடி நிலைமை முற்றுகிறது. நாடார் வகுப்பைச் சேர்ந்த வியாபாரிகள், போலிஸ் அதிகாரிகள் சிலரின் ஜாடையான ஆதரவோடு, ஏழை அரிஜனங்களுக்குப் பணம் கொடுத்து, எனது ஆதரவாளர்களைத் தாக்கும்படி துhண்டிவிட்டு வருகிறார்கள்" என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதோடு அந்த ஆறு எம்.ஏ. க்களும் கமுதி இன்ஸ்பெக்டர், முதுளத்தூர், கடலாடி, நரிக்குடி, கமுதி இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டு குற்றம் சாட்டி, அவர்களை அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு விரைவில் மாற்றும்படி கலெக்டரை வேண்டியிருக்கிறnர்கள். இதே விவரங்கள் டி.எஸ்.பி. முன்னிலையிலும் வைக்கப்பட்டுள்ளன. தூண்டி விட்டுக் கலகத்தை மூட்டும் நிலைமை நிமிடத்துக்கு நிமிடம் வளருகிறது என்று, இவ்வளவு தூரம் எடுத்து விளக்கியும் கூட, செப்டம்பர் 10-ஆம் தேதி வரை அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நேரடியாக, முறையிடப்படும் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால், கலெக்டர் எல்லாத் தரப்புத் பிரதிநிதிகள் அடங்கிய சமாதான மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனாலும் நிலைமையை மேலும் வளர விடாமல் தடுப்பதற்கான அருமையான காலமெல்லாம் வீணாக்கப்பட்டு விட்டது. இதனால் நெருக்கடி நிலைமை நாளுக்கு நாள் முதிர்ந்து கொண்டே போய் விட்டது.

செப்டம்பர் 9 ல் நான் டெல்லியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாளில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் கலந்து கொண்டேன். சமாதானமாகவும் அமைதியாகவும் எல்லா இன மக்களும் இருக்கும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளில் கையொப்பமிட்டேன். சமாதான மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான திரு இமானுவேல் என்பவர் 11 ம் தேதி தாக்கப்பட்டுக் கொலையுண்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்திற்கு என்னைப் பொறுப்பாளி ஆக்கியிருக்கிறார்கள். முதுகுளத்தூர் தொகுதிக்கு 15 மைல் அப்பாலும், என் சொந்த கிராமமான பசும்பொன்னுக்கு 30 மைல் தள்ளியும் உள்ள பரமக்குடியில் அன்று நடந்த சம்பத்திற்கு நான் பொறுப்பாளியாக்கப் பட்டிருக்கிறேன், என்பதைக் குறிப்பாக போர்டின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அன்றைய தினத்தில் நான் அங்கு போனதுமில்லை. 13 ம் தேதி எனது முதுகுளத்தூர் தொகுதிக்கு அப்பால், உள்ள பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த, அருங்குளத்தில் மறவர்களுக்கும் அரிஜனங்களுக்குமிடையே கடுமையான கலகம் நடந்திருக்கிறது. 14ம் தேதி கீழத்தூவல் கிராமத்தில் மிருகத்தனமான ரீதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்து, ஐந்து மறவர்கள் துடிககத் துடிக்கக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பிறகு செப்டம்பர் 16ஆம் தேதி தான் முதன்முதலாய் முதுகுளத்தூர் பகுதிக்கு கலவரம் வருகிறது. நாடார்கள் தூண்டுதலாலும், போலிசாரின் உதவியாலும் அரிஜனங்கள் அணிவகுத்துப் போய் நான்கு மறவர்களைக் கொன்றிருக்கிறார்கள். மறவர்கள் திருப்பித் தாக்கி, இரண்டு அரிஜனங்களைக் கொன்று, அந்த தாக்குதலை விரட்டி அடித்திருக்கிறார்கள். 17 ம் தேதி போலிசாரின் கொலைப்படலம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கீரந்தைக்கு இரண்டாவது தடவையாக வந்து, எனது ஆதரவாளர்களான ஒரு அரிஜன் உட்பட ஏழு பேர்களை கொன்று விட்டனர். பகிரங்கமான இவ்வளவு குரூரமான முறையில் தூண்டிவிடப்பட்ட சம்பவங்கள், பல இடங்களிலும் நடந்து கொண்டு வருகையில், ஒரு தரப்பில் மட்டும் அடக்க நிலை சாத்தியமா? காங்கிரஸ் சர்க்காரும் நாடார் வியாபாரிகளும் சேர்ந்து மறவர்களுக்கு விரோதமான உணர்ச்சிளைக் கிளறி விடும் தங்கள் வேலையைச் சரிவரச் செய்து, அச்செயல் குரூரம் அடைந்து, தமது உயிரையே பறிக்க வந்த நிலையில், சில பகுதி மறவர்கள் தங்கள் பதட்டத்தை அடக்க முடியாமல், திருப்பி தாக்கியது தவிர்க்கக் கூடியதல்ல.

இந்தக் குழப்ப நிலையில் சமாதானக்குழு ஒன்று உதயமாயிற்று. காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியைச் சேர்ந்த திரு. சா. கணேசன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. ராமமூர்த்தி இராமநாதபுரம் சேதுபதி, தமிழரசுக் கழகத்தை சேர்ந்த ம.பொ. சிவஞானம் ஆகியோர். இக்குழுவினர் செப்டம்பர் 21ம் தேதி மதுரைக்கு வந்து, அன்று பிற்பகல் என்னைச் சந்தித்தனர்.சமாதானக் குழுவிற்கு எனது முழு ஒத்துழைப்பைத் தருவதாகவும், சமாதானத்தை நிலைக்கப் பண்ணுவதில் நான் எல்லோரையும் விட அதிக அக்கறையாக இயங்குகிறேன் என்றும் அக்குழுவினரிடம் வாக்களித்தேன். ஆரம்பத்தில் சமாதானத்திற்கு வாக்களித்து, ஒத்துழைப்பதாய் வாக்களித்த காங்கிரஸ் தலைவர்கள், பிறகு அவ்வக்குறுதியை நழுவ விட்டார்கள்.

திரு. ம.பொ. சிவஞானம் கிராமணியார் எனது சமாதான ஆர்வத்தையும், அதற்காக நான் ஒத்துழைக்க உடன்பட்ட உண்மை பூர்வமான என் மனப்பாங்கையும் விவரித்து விடுத்த அறிக்கையின் பிரதியை இத்துடன் இணைத்திருகிறன். அது செப்டம்பர் 25 ம் தேதி இந்து பத்திரிக்கையிலும் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் 19 ம் தேதி முதுல் 25 ம்தேதி வரை கீழத்தூவல் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் மீது ஸ்ரீவெங்கடஸ்வரன் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை, அரசாங்கம் தன்னை அச்சம்பவங்களில் சம்பந்தப்படாத மாதிரி காட்டி, தன்னை மறைத்துக் கொள்வதந்காகச் செய்து கொண்ட ஏற்பாடேயன்றி, உண்மை நிலையை விளங்கிக் கொண்டு
, நியாயம் வழங்குவதற்காக அல்ல என்று கண்டதும் அவ்விசாரணையை அன்று மட்டும் மறுக்கவில்லை. இன்றும் கூடத்தான் மறுக்கிறேன். எவ்வித மேலாதிக்கம் இல்லாத, சுதந்திரமான நீதி விசாரணை ஹைகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் மூலம் நடத்தப்பட்ட வேண்டும் என்பதிலும், அதைத் தவிர வேறு வகையான அரசாங்க விசாரணை எதுவும் பயன் தராது என்பதிலும் எனது உறுதி அன்று மட்டுமல்ல, இன்றும் அதே தான்.

அதிகாரத்தில் இருக்கிற சர்க்கார், குறிப்பாக, முதல் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும் இந்தச் சவாலில் உட்பட்டிருப்பதால், அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் மேலாதிக்கத்திற்கு அடங்கிய எந்த விசாரணையும் நீதியைப் பிரதிபலிக்காது என்பதே எனது நோக்கம் அன்றும் இன்றும் இத்தகைய அவசர விசாரணை கூட உண்மையை விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பளித்து விசாரணை விபரம் பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் மூலம், போலிசாரின் கொடுமைகள் எவ்வளவு தூரம் மேலோங்கி இருக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சாட்சி சொல்ல வந்தவர்கள் போலிசாரின் பயங்கரத்திற்கு எவ்வளவு தூரம் ஆட்பட்டு இருக்கிறார்கள்? என்பதையும் விசாரணை மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தச் சமயத்திலெல்லாம் மேலும் கலகநிலை வளராமல் தடுத்து, சமாதானத்தை நிலை நாட்டுவதில், அதர கட்சிப் பிரதிநிதிகளோடு, நான் முழு முயற்சியில் ஈடுபட்டு இருந்தேன். எங்களது இடைவிடாத முயற்சியின் பயனாகத்தான் அமைதி சாத்தியம் ஆயிற்று.

கலெக்டரும் மதுரை டி.எஸ்.பி.யும் இந்த அமைதி நிலையைப் பற்றி (செப்-28 வரை) பத்திரிக்கைகளுக்குச் செய்தி கொடுத்துள்ளனர்.அதே நாள் மாலை, அதாவது செப்டம்பர் 28-ம் தேதி காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் தொடக்க விழாக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் தொடக்க விழாவில் நான் கிட்ட தட்ட இரண்டரை மணி நேரம் பேசினேன். எனது அந்தச் சொற்பொழிவில், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் படிப்படியான முன்னேற்றத்தை விபரமாக எடுத்துக் கூறினேன். பழைய காங்கிரஸ்காரர்கள் அதை விட்டு விலகியதற்கான காரணத்தையும், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி உதயமான விபரத்தையும் ஒரு புதுக் கட்சி தோன்றித் தீரவேண்டிய அவசியத்தையும் விளக்கினேன்.

என்னுடைய நீண்ட நேரப் பேச்சில் முதுகுளத்தூர் பிராந்தியத்தில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குவதற்காக அரைமணி நேரப் பேச்சில் சமாதானத்தையும் சகல இன மக்களின் அமைதியையும் தான் அழுத்தமாக நான் வலியுறுத்தினேன். அதோடு, சர்க்காரின் ஜாதி துவேஷ வளர்ப்புக் கொள்கையையும் எல்லா இன மக்களிடமும் நான் பெற்றுள்ள மரியாதையையும், ஆதரவையும் ஜாதி துவேஷத்தின் மூலம் அழித்துவிடக் கையாண்டு வரும் வழிமுறைகளையும் பச்சை பச்சையாக ஒன்று விடாமல், ஆதாரத்தோடு விளக்கினேன். ஆனால் நான் சச்சரவை விரும்பவில்லை. சமாதானத்தையும் அமைதியையுமே விரும்புகிறேன். அதற்காகவே இரவு பகல் ஓயாமல் பாடுபடுகிறேன். துன்புறுத்தப்பப்பட்ட மக்கள், தங்கள் இன்னல்களைக் களைந்து கொள்ளச் சட்டத்தில் வசதி இருக்கிறது. எவ்விதத் துன்பம், எவரால் கொடுக்கப்பட்டாலும், அதற்கு மாற்று வழி சட்டப் பாதையேயன்றி சண்டை அல்ல என்பதே எனது குறி. பலாத்கார செயல்களே கூடாது என்பதில் எனக்குள்ள அழுத்தமான அக்கறையை பலதடவை நான் மெய்ப்படுத்தி இருக்கிறேன். அன்றைய கூட்டத்திலும் வற்புறுத்திப் பேசினேன். அப்பேச்சின் சுருக்கம் செய்திப் பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது. அந்த நகல் பிரதிகளும் இத்தோடு இணைத்திருக்கிறேன். பல ஆயிரம் மக்களுக்கு முன், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டைத் திறந்து வைத்து, நீண்ட பெரும் பிரசங்கத்தைச் செய்து முடித்த அரை மணி நேரத்தில், என்னிடம் தடுப்புக் காவல் சட்டப்படி சிறைப்படுத்தும் உத்தரவு கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டேன். சென்னைக்குக் கூட்டி வந்தார்கள். மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளேன்.

நடப்புகளின் பின்னணி இதுவாக இருக்கையில், என்னைச் சிறைப்படுத்த ஏதேனும் நியாய சம்மதம் இருக்க முடியுமா?சமாதான சாத்தியத்திலும், எல்லா இன மக்களின் ஐக்கியத்திலும் எனக்கு இதரரை விட அதிக கவனம் உண்டு. சாதி வெறியைக் கிளறிவிட்டோ, கலவரத்தைத் தூண்டிவிட்டோ நாட்டின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. அதிலும் முதுகுளுத்தூர் பிராந்திய ஜன ஒற்றுமையில் எனக்கு அக்கறை அதிகம். ஏனெனில், கடந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியைக் கொடுத்த தொகுதி அது.

மேலும், இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். நான் தேவர் மரபைச் சேர்ந்தவன். எனது சகாவன சசிவர்ணத் தேவரும் ஒரு தேவர். நானும் அமோக வாக்குகளால் ஜெயித்தேன். சசிவர்ணத் தேவரும் அதே மாதிரி ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார். ஆனால், நாங்கள் வெற்றி பெற்றது எங்கள் தேவர் மரபினரின் ஓட்டுக்களால் மட்டுமல்ல; இதர மக்களின் வாக்குகளாலும் தான். முதுகுளத்தூர் தொகுதி வாக்காளர்களில் தேவர் ஓட்டுக்கள் 35 ஆயிரம் தான். அரிஜன வாக்குகள் 45 ஆயிரம். இதர இனத்தாரின் வாக்குகள் 90 ஆயிரத்துக்குமேல். மார்ச் மாதம் நடந்த தேர்தலில் நான் பெற்ற ஓட்டுக்கள் 55,333. எனக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற ஓட்டு 32,767. ஜுலையில் நடந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் 56,657. காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற வாக்குகள் 32,875. இவ்வளவு ஏற்ற தாழ்வான வாக்கு வித்தியாசம் இருக்கையில், சகல இன மக்களும், என்னையும், எனது சகாக்களையும் அபிமானத்தோடு ஆதரித்துத் தமது வாக்குகளைப் போடும் நிலையில், நான் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விட்டுத் திட்டமிடுவதிலும், சட்ட விரோதச் செயல்களுக்குத் தூபமிடுவதிலும் நாட்டங்காட்டினால், அது அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதை சாதாரண பொது அறிவுள்ளவன் கூடப் புரிந்து கொண்டு விடுவது எளிது.

ஸ்ரீபக்தவச்சலம் அவ்வளவு பயங்கரமாகப் பேசியும், காங்கிரஸ் தலைவர்கள் இழிவான பிரச்சாரத்தைச் செய்தும், சர்க்காரின் மூலம் பல சகிக்கவியலாத தொல்லைகள் கொடுத்தும், என் தொகுதி மக்களை ஜனநாயக வழியிலிருந்து பிரிக்கவோ, என்னிடமும், நான் சார்ந்துள்ள அரசியல் கட்சியிடமிருந்து அவர்களின் அபிமானத்தையும், ஆதரவையும் உதற வைக்கவோ முடியவில்லை என்பது வெளிப்படை. ஆகவே தான் ஆகஸ்ட் மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும் நெருக்கடி நிலை என் தொகுதியில் உருவானதை அறிந்து சசிவர்ணத் தேவரும் பிறரும் அடுத்தடுத்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அம்முறையீடு அத்தனையும் அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்டு விட்டன. எனக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களை எவ்வளவு குரூரமாகக் கொடுமைப்படுத்தியும் கூட, அவர்களின் அபிமானத்தையும் உறுதியையும் கலைக்க முடியவில்லை. முடியாது எனக் கண்ட அரசாங்கம், என்னைப் பிடித்தாலாவது அம்மக்களின் மனதைத் திகில்படுத்தி நடுநடுங்க வைக்கலாம் என்று திட்டமிட்டு, அந்தத் திட்டத்தின்படி, என்னைச் சிறைப்படுத்தியிருக்கிறதே தவிர, என்னைச் சிறைப்படுத்துவதற்கான உண்மைக் காரணங்களோ, நியாயமோ கொஞ்சமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என்னைத் தடுப்புக்காவல் சட்டத்தில் சிக்க வைத்திருப்பதற்குக் காரணம், எனக்குள்ள அரசியல் செல்வாக்கை ஒழிக்க, அதிகாரத்தில் இருக்கிற கட்சி, செய்த சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான். அதே சதியின் விளைவுதான் முதுகுளத்தூரில் நடைபெற்ற வேதனைமிக்க சம்பவங்கள். இதைத் தவிர நாட்டின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்கு பரிபாலிப்பிற்கும் என்னைச் சிறைப்படுத்தி இருப்பதற்கும் சம்பந்தமே இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலாவது பாராவுக்கு எனது விளக்கம் அகில இந்திய ரீதியில் பலாத்காரப் போராட்டம் நடத்தப் போவதாக நான் பயமுறுத்திப் பேசினேன் என்று கூறப்பட்டிருப்பதில் உண்மை இல்லை. ஆனால், நம்முடைய சர்க்காரின் காமன் வெல்த் உறவு தொடர்பு குறித்த வெளிநாட்டுக் கொள்கையைக் காரசாரமாக விமர்சித்திருக்கிறேன். காமன்வெல்த் உறவை விட்டு ஆறு மாதங்களுக்குள் விலகாவிடில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக நான் மதுரைப் பொதுக்கூட்டத்தில் பிரகடனித்தேன் என்று சர்க்கார் குற்றஞ்சாட்டுகிறது.

அதாவது நான் மதுரையில் அவ்வாறு பேசியதாக அரசாங்கம் குறிப்பிடுகிற தேதி 1956 மே மாதம் 12ம் தேதி. முதுகுளத்தூர் சம்பவம் நடந்தது 1957 செப்டம்பரில். இதற்கிடையில் உள்ள இடைவெளி 16 மாதங்கள்.16 மாதங்களுக்க முன் நான் பேசியதாகச் சொல்லப்படும் ஒரு விஷயத்தை, 16 மாதங்கள் சென்றபின் நடந்த மற்றொரு சம்பவத்தோடு பிணைத்து, அதுதான் கைதாவதற்குக் காரணம் ஆனது எப்படி சாத்தியமாயிற்று? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நடவடிக்கையில் இருக்கும் ஒரு அரசியல் ஊழியன் நான். இந்த முறையில் சாதாரணமாக நான் மாதம் சுமார் 10 கூட்டங்கள் வரை சொற்பொழிவாற்றி வருகின்றேன். தேர்தல் காலத்தில் நாள் ஒன்றுக்குப் பத்துக்கூட்டம் வரை பேசி இருக்கிறேன்.இந்தப் பதினாறு மாத கால அவகாசத்தில், நான் பேசிய கூட்டங்கள் ஏராளமாக இருக்கும். ஆனால், நான் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் சொல்வது ஐந்து கூட்டங்களைத்தான். இதிலிருந்தே சர்க்காரின் குற்றச்சாட்டுக்களில் உள்ள பலவீனம் தெரிகிறது.

மேலும், நான் மதுரையில் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் கூறுகிற 1956 மே 12க்கும், முதுகுளத்தூர் சம்பவம் நடந்த 1957 செப்டம்பருக்கும் இடையில் எவ்விதச் சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது இந்த இடத்துக்கு அதிக முக்கியம். 2வது பாராவுக்கு விளக்கம்இது முழுக்க முழுக்கப் பொய். பணக்கார நாடார் வியாபாரிகளின் முறைக்கொவ்வாத வியாபாரப் போக்கையும், சாதாரண இன மக்களையும் விட்டுத் தனித்தியங்கும் பழக்கத்தையும் மட்டும்தான் கண்டித்துப் பேசினேன். அதோடு நாடார்களில் அத்தகைய செயல்களை மாற்ற, மற்ற பொதுமக்கள் முனைய வேண்டும் என்றும் பேசினேன். அரிஜனங்கள் வகுப்புணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆட்பட்டு, பொறாமைப்பட்டோரின் கருவியாகி விட வேண்டாம் என்று, அரிஜனங்களையும், சர்க்காரின் தயவையும், உதவியையும் பெற்று வகுப்புக் கலவரத்துக்கு அடியிடும் பணக்கார நாடார்களையும் எச்சரித்தேன். என்னுடைய இந்தப் பேச்சு, மறவர்களால் தாக்கப்படுவதற்கு அரிஜனங்களை இலக்காகிற்று என்று சொல்வது அறிவீனமாகும்.

1957 மே, ஜுன் மாதங்களில் வகுப்புக் கலவரம் நடந்ததாக எவரும் புகார் பண்ணவில்லை. வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. ஆகவே, 1957 ஏப்ரல் 17ல் நான் பேசியதன் மூலம் அரிஜனங்கள், மறவர்களின் தாக்குதலுக்கு இலக்கானார்கள் என்று கூறுவதில் பொருளே இல்லை. எனது கைதுக்கு அந்தப் பேச்சையும் ஒரு காரணமாகக் காட்டப்படும் அறிக்கை சுத்தச் சூன்யமாகவே காண்கிறது. குறிப்பாக இக்குற்றச்சாட்டு, வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட பொய்மை நிறைந்ததாகும்.

3வது பாராவுக்கு விளக்கம் 1957ல் ஜுன் 14ல் அபிராமத்தில், கலவரத்திற்குத் தூண்டப்படும் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டு விடாமல், அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு முன்னறிவிப்பு செய்தேன். போலீசைப் பயமுறுத்தி பேசியதாகக் கூறுவது சிறிதும் உண்மைக்கு ஒட்டாது.

4வது பாராவுக்கு விளக்கம் 1957 ஜுலை 10ல் திருப்புவனம் புதூரில் பேசினேன். ஜுன் 27ல் திருச்சுழியில் பேசிய மாதிரிதான் திருப்புவனம் புதூரில் பேசினேன். திரு பக்தவத்சலம் பேசியது போன்று காங்கிரஸ்காரர்கள் கலவரத்தை உண்டாக்கும் தோரணையில் பேசிவரும் பேச்சுக்களை வெளிப்படுத்தி விமர்சனமும் செய்தேன். முதுகுளத்தூரில் மூன்றாவது உலகப் போரை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னேன் என்று கூறப்பட்டிருப்பது பெருத்த அபத்தமாகும்; அதிவேகமானதும்கூட. சமாதான மாநாட்டில் அரிஜனங்களின் பிரதிநிதியாகப் பேச வந்திருப்பவர் திரு. இமானுவேல். ஆனால், முதுகுளத்தூர் தொகுதிக்குச் சட்டபூர்வமான மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. வேறொருவர் இருக்கிறார். அதனால், இத்தொகுதியின் அரிஜனங்களுக்காக பிரதிநிதித்துவம் வகித்துப் பேசுவதற்கு, இத்தொகுதி எம்.எல்.ஏ. தான் அதிகாரபூர்வமானவர் என்று தான் நான் சொன்னேன். இதைத் தவிர ஒரு அரிஜன் எனக்கு முன் சமமாகப் பேசுவதால், என் கௌரவம் குறைந்து விட்டதென்று நான் கூறவேயில்லை. எனது தொகுதியில் திரு. பெருமாள் என்ற அரிஜன் ஒருவரை என்னோடு சமமாக ரிசர்வ் ஸ்தானத்திற்கு நிறுத்தி ஜெயிக்க வைத்த நான், சமாதான மாநாட்டில் ஒரு அரிஜன் எனக்கு முன் பேசியதைக் கேவலமாகக் கருதி, என்னவோ சொன்னேன் என்று குறிப்பிடுவது குழந்தைத்தனமும் மதியீனமுமாகும்.

அதோடு, மற்றொன்றையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது, ஜாதி அமைதியையும், சமாதானத்தையும் வேண்டி, நானும் எனது சகாவான முதுகுளத்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினரும் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்படவேயில்லை. திரு இமானுவேல் தாக்கப்பட்டதற்கு என் மீது பொறுப்பைச் சுமத்தும் நோக்கத்தோடு அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாமலேயே மறைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீவெங்கடேஸ்வரன் விசாரணையின் போதும், நான் இனத் துவேஷத்தைத் தூண்டி விட்டேன் என்றோ, திரு இமானுவேல் மீது பகையுணர்ச்சிப் பட்டிருந்ததாகவோ, எந்தச் சாட்சியும் கூறவில்லை. இந்த நிலைமையில் அருவருக்கத்தக்கத் தக்க பல குற்றச்சாட்டுகள் என் மீது தவறாகச் சாட்டியிருக்கிறார்கள். இதெல்லாம், போர்டாரின் கருத்து என்மீது தவறாகப் படரட்டும் என்பதற்காகவே. துரதிருஷ்டவசமாக அச்சம்பவம் குறித்துக்காட்டப்பட்டுள்ள எல்லாமுமே உண்மைக்குப் புறம்பானவை. குற்றச்சாட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மாதிரி, சமாதான மாநாடு முடிந்ததும் இமானுவேல் பற்றி நான் கூறவே இல்லை; அப்படிக் கூறவும் மாட்டேன். அம்மாதிரி நினைப்பதற்கே இழிவான அச்செயலை நான் புரியத் திட்டமிட்டிருந்தால், அதைப் பலபேர் முன்னிலையில் பறையடிப்பதற்கு நான் முட்டாள் அல்ல. இமானுவேல் மரணத்திற்கும், இக்கலவரங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இக்கலவரச் சம்பவங்களோடு சேராத வேறு பல காரணங்கள் அதைச் சுற்றி நிற்கின்றன. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதைப்பற்றி இதற்குமேல் அதிகம் விவரிக்காமல் விடுகிறேன்.

செப்டம்பர் 16ல் வடக்கம்பட்டி கூட்டத்தில் நான் பேசியதாகக் குறிப்பிடப்பதும் மோசமான பொய். காங்கிரஸ் தலைவர்களின் தவறான போக்காலும், போலீசாரைத் தங்கள் கெட்ட எண்ணத்திற்குப் பயன்படுத்துவதாலும், அவர்களது நோக்கம் ஈடேறாது என்று எச்சரித்தேனே தவிர, நிலைமையை அடக்க சர்க்கார் பலாத்கார நடவடிக்கையில் இறங்கினால், அதே செயல் மூலம் பதிலளிக்கப்படும் என்று நான் குறிப்பிடவேயில்லை. மேலும் இந்த நாட்டில் தருமத்தை நிலைநாட்டுவதற்காக மக்கள் ஆயுதம் ஏந்தும்படியோ, உள்நாட்டுப் போராட்டத்தை ஆரம்பிக்கும்படியோ நான் பேசவேயில்லை. அதற்கு மாறாக, வகுப்பு ஐக்கியத்தையும் சமாதான வாழ்வையும் வற்புறுத்தினேன். அதோடு கடுமையான அடக்கு முறையை நடத்தியும் கூட, பிரிட்டிஷ் சர்க்கார் இப்பகுதி மக்களைப் பயமுறுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை என்பதை, காங்கிரஸ் சர்க்காருக்கு நினைவுறுத்தி, அத்தகைய மக்களை அனாவசியமான அடக்குமுறையின் மூலம் அதிரச் செய்துவிட காங்கிரஸ் முயன்றால், பலன், பிரிட்டிஷ் சர்க்கார் பெற்றதாகத் தான் இருக்கமுடியும் என்று எச்சரிக்கவும் செய்தேன். இந்த அளவுக்கு கூட அரசியல் ரீதியில் பேசுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை கிடையாதா?

வடக்கம்பட்டியில் செப்டம்பர் 16ல் நான் பேசிய பிறகு, கொலை, கொள்ளை, தீ வைப்புகள் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அச்சம்பவங்களை முன்னர் நான் குறிப்பிட்ட பகுதியில், இருக்கும் போலீஸ் அதிகாரிகளின் செயலால் விளைந்தவை என்று தான் கூறுவேன். அந்த அதிகாரிகளை அந்த இடத்தில் இருந்த மாற்ற வேண்டுமென்று ஆரம்பத்திலேயே எனது தரப்பிலே மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தும் எதுவும் செய்யாமல் விட்டு விட்டதால், அந்தச் சம்பவங்களுக்கு அந்த போலீஸ் அதிகாரியைத் தவிர வேறு எவரும் காரணமாயிருக்க முடியாது. பொதுவாக, இச்சம்பவங்களின் ஆரம்பமும் முடிவும் ஏழு நாட்கள் தான் செப்டம்பர் 14லிருந்து 20க்குள் நிலைமை ஓய்ந்து விட்டது. இதை கலெக்டரும் டி.எஸ்.பியுமே ஒப்புக்கொண்டு அறிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் நான் செப்டம்பர் 28ம் தேதி, அதாவது நிலைமை ஓய்ந்து சமாதானம் சாத்தியமான எட்டு நாட்கள் கழித்து, சிறைப்படுத்தப்படுகின்றேன். 20ம் தேதி நடந்த சம்பவங்களுக்காக 28ம் தேதி நான் சிறைப்பட எப்படி நியாய சம்மதம்? கிடைத்ததோ தெரியவில்லை. "கலவரம் ஓய்ந்து எட்டு நாட்களான பிறகு, சமாதானம் வந்து விட்டது" என்று அதிகாரிகளே அறிக்கை வெளியிட்டபிறகு, என்னிடம் தடுப்புக் காவல் சட்டத்தை நீட்டினால், அதில் நியாயச் சார்பு ஒரு ஓரத்திலாவது ஒட்டியிருக்கமுடியுமா? ஒரு போதும் முடியாது.

தமிழ்நாடு பத்திரிகையின் பிரதிநிதியோடு நான் பேசுகையில், சர்க்காரோடு சண்டையிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியதாகக் குறிப்பிட்டு இருப்பதற்கு அடிப்படையே இல்லை. நான் சொல்லியதே வேறு. அந்தச் செய்தியில் தேதி குறிக்கப்படாது போயினும் 24ம் தேதி நான் அந்தப் பத்திரிகைப் பிரதிநிதியுடன் பேசும்போது குறிப்பிட்ட விபரம் மேற்படி பத்திரிகையில் 25ம் தேதி வெளிவந்திருக்கிறது. அதன் நகலை இத்தோடு இணைத்துள்ளேன். அதுவே, அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும்.எவ்விதத் தொடர்புமற்ற முறையில் எங்கோ இருக்கிற எனது சொந்தக் குராமத்தில் உள்ள எனது வீட்டிற்குச் சென்று, எனது வீட்டுப் பணியாளர்களைக் கைது செய்து இருப்பதன் மூலம், அரசாங்கம் என்னைக் கோபப்படுத்த முனைகிறது என்ற விபரத்தை அந்தப் பத்திரிக்கை நறுக்கின் மூலம் எவரும் புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீவெங்கடேஸ்வரனின் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது, அரிஜனங்களை அச்சுறுத்துவதற்காக நான் கட்டிட வாயிலில் காத்திருக்கவில்லை. அவ்விசாரணையில் கலந்துகொள்ள நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆயினும் சசிவர்ணத் தேவர் உட்பட என் நண்பர்கள், அதில் கலந்து கொள்ள விரும்பினார்கள். 19ம் தேதி நான் அவர்களுடன் மோட்டார் காரில் பரமக்குடிக்குப் போனேன். விசாரணை நடந்த இடத்திற்கு என் நண்பர்கள் சென்றார்கள். நான் அரை மணி நேரம் மற்றொரு நண்பரின் வருகைக்காக அங்கு காரில் காத்திருந்தேன். 21ம் தேதி ஐந்தே நிமிடம் அங்கு காரில் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தேன். 22,23,24 தேதிகளில் நான் அந்த இடத்திற்கே போகவில்லை. 23ம் தேதி நான் பரமக்குடியில் இருக்கவில்லை. மகாளய அமாவாசைக்காக ராமேஸ்வரம் கோவிலில் சொற்பொழிவும் ஆற்றினேன்.கடைசியாகச் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே, பொய்யானவை என்பது, அடிஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுக்கும் சர்க்காருக்குமே நன்கு தெரியுமென்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் சமாதானத்திற்காக ஒவ்வொரு மூச்சையும் செலவிட்டு இருக்கிறேன் என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். செப்டம்பர் 10ல் கலெக்டர் கூட்டிய சமாதான மாநாட்டில் தயாரிக்கப்பட்ட சமாதான வேண்டுகோளில் நான் கையெழுத்துப் போட்டு இருக்கிறேன். டில்லிக்குச் செல்லும் முன், வகுப்புணர்ச்சிக்கு இடம் கொடுத்து சமாதானத்தைக் குலைத்து விட வேண்டாமென்று வேண்டியிருக்கிறேன். டில்லியில் இருந்து திரும்பி வந்த பின்னரும், தொடர்ந்து சமாதானத்துக்காக வேண்டுகோள் விடுத்து, அதற்காகப் பாடுபட்டும் வந்திருக்கிறேன். செப்டம்பர் 21ல் மதுரை வந்த சமாதானக் குழுவினர்க்கு பூரண ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்திருக்கிறேன். ஆனால், காங்கிரஸ்காரர்கள் முதலில் உடன்பட்டு, பிறகு உதறி விட்டனர்.

நான் கைதாவதற்கு சற்று முன்பு மதுரையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய நான், "பலாத்காரத்தில் யார் ஈடுபட்டாலும் எனது இதயத்தைப் பிளந்து அதிலிருந்து சொட்டும் உதிரத்தைக் குடித்த பாவியாவார்கள்" என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டேன். நான் விரும்புவது சமாதானமே என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் காட்ட முடியுமா? சமாதானத்தை விரும்பும் ஒருவன் இதைவிட மேலான உண்மையான வேண்டுகோளை விடுக்க முடியுமா? ஒரு சமாதான வேண்டுகோளை இதைவிட உறுதியான வார்த்தைகளால் கோர்த்து விடுக்கத்தான் முடியுமா? சமாதானத்திற்காக முன்நிற்கும் ஒருவன் தனது எண்ணத்தை இதைவிட வேறு முறையில் எப்படித்தான் வெளிப்படுத்துவது? காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டை மதுரையில் செப்டம்பர் 28ல் தொடங்கி வைத்து நான் பேசிய பேச்சு முழுவதும் டேப்-ரிக்கார்டு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் முதுகுளத்தூர் சம்பவம் பற்றி நான் பேசிய பகுதியை மட்டும் திரும்ப வைத்துக்கேட்டால், சமாதானத்தில் எனக்குள்ள உறுதி திட்டவட்டமாகப் புலப்படும். அந்த டேப்-ரிக்கார்டைத் திரும்ப வைத்துக் கேட்கும்படி போர்டரைக் கேட்டுக்கொள்கிறேன்.

என்னைச் சிறைப்படுத்தியது சரிதான் என்று போர்டார் நம்புவதற்காக, கௌரவமற்ற முறையிலும், நியாயமற்ற முறையிலும் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தான் அத்தனையும். என் மீது பல குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. குற்றம் சாட்டியவர்களைக் குறுக்கு விசாரணை செய்து, எனது நிலைமைகளைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பும் எனக்குத் தரவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால், என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துவேன். அத்தகைய வாய்ப்பு இல்லாத சிரமத்தில் நான் இருப்பதைப் போர்டார் புரிந்துகொள்ளலாம்.

சமாதானமாக இருக்கும்படி நான் வேண்டுகோளே விடுக்கவில்லை என்பது என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்று. இது எவ்வளவு மோசமான, உண்மையை மூடி முத்திரை வைத்த பொய்யான குற்றச்சாட்டு என்பதை நான் விளக்கத் தேவை இல்லை. ஆனால், இது ஒன்றை வைத்தே என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் ஒருதலைத் தன்மையை அளவிட்டு விடலாம். மற்றும் எனது பேச்சுக்களைக் காரணம் காட்டி சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குச் சரியான ஆதாரத்தைச் சர்க்காரும் கொடுக்கவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் சந்தர்ப்பமும் எனக்குத் தரப்படவில்லை. எனவே, நான் சமாதானத்திற்காக உண்மையான வேண்டுகோள் விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொய் பொய் பொய் பொய் என்ற ஒரு தரம் அல்ல; நூறு தரம் சொல்கிறேன். சொல்லுவதற்கான ஆதாரங்களை மேலே நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன். நான் விவரித்துள்ள அவ்வளவும் ஆதாரபூர்வமானவை. அவைகளுக்குரிய முக்கியத்துவம் அளிக்கும்படி போர்டாரை வேண்டுகிறேன்.

நான் பின்னாலிருந்து கொண்டு தேவர்களைப் பலவந்த நடவடிக்கைகளுக்குத் தூண்டி விட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு குற்றம் சாட்டப்படுவது எளிது. ஆனால் அதை நிருபிப்பது கடினம். காட்டுத்தனமான இக்குற்றச்சாட்டில், ஒரு பகுதியாவது உண்மையென்று நிரூபிக்க, மிகச்சிறயதொரு ஆதாரத்தையாவது எடுத்துக்காட்டும்படி அரசாங்கத்தை அறைகூவுகின்றேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் விடுத்துள்ள சமாதானக் கோரிக்கைகளும், எடுத்துள்ள சமாதான நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை நியாயத்தின் முன்னே நெருங்க விடா. எனவே, என்னைச் சிறைப்படுத்தியிருப்பதற்குச் சரியான காரணம் கொஞ்சமும் இல்லை. நான் எனது சுதந்திரத்தை, மேலும் வகுப்புக் கலவரத்தை வளர்ப்பதற்கும், நாட்டின் பாதுகாப்புக்குப் பாதகம் விளைவிப்பதற்கும் பயன்படுத்துவேன் என்று கூறப்படுவதில் பொருள் இல்லை; அதற்கான ஆதாரங்களும் காட்டப்படவில்லை. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் சர்க்கார் செய்துவரும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவைகளை மூடி மறைத்துக் கொள்ளவும், சர்க்கார் புரியும் மோசமான அரசியலை எதிர்ப்பவர்களில் நான் முக்கியமானவனாக இயங்கி வருவதால் என்னை அலைக்கழிக்கவும் தான் சர்க்கார் என்னை இந்தச் சட்டத்தால் வளைத்திருக்கிறது. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் கலக்கத்தைத் தூண்டிவிட்டது; அதன் மூலம் வேதனை மிக்க விளைவுகள் ஏற்பட்டது ஆகிய குற்றங்களுக்கு சர்க்காரும் குறிப்பாக முதன் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும்தான் பொறுப்பு என்று நிச்சயமாக உறுதியாகக் குற்றம் சாட்டுகிறேன். சர்க்காரும் குறிப்பாக முதல் மந்திரியும் உள் நாட்டு மந்திரியும் இந்தக் குரூரமான சம்பவங்களை உண்டாக்கியது எனது அரசியல் செல்வாக்கை அழிக்கவே என்பதையும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன். எனது குற்றச்சாட்டுக்கள் அத்தனைக்கும் போலீஸ் புரிந்த அக்கிரமச் செயல்களுக்கும் நீதிபதி விசாரணை நடத்தும்படி வலியுறுத்தி இருக்கிறேன்.

பொது மக்களும், பிரபலம் வாய்ந்த ஆங்கிலம் தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகளும் குறிப்பாக இந்து இந்தியன் எக்ஸ்பிரஸ், மெயில் போன்ற பத்திரிகைகள் அரசாங்கக் கொள்கையை வன்மையாகக் கண்டித்து எழுதி இருக்கின்றன. இவ்வகையில் அரசாங்கம் புரியும் செயல்களையும் கொள்கைகளையும் பலமாகக் கண்டிப்பதில் நான் மிக முக்கியமாக இருப்பதால்தான், அரசாங்கம் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறதேயன்றி, ஒழுங்கை நிலைநாட்டவோ, நாட்டுப் பாதுகாப்பிற்கோ அல்ல. தமது நோக்கம் போல் எதையும் முரட்டுத்தனமாகச் செய்வதற்கு இடைஞ்சல் படுத்தும் வகையில், நாடெங்கும் எதிரொலி செய்யும் எனது கண்டனக் குரலைக் கேட்காமல் செய்ய சர்க்கார் கொண்ட ஏற்பாடுதான் எனது சிறைவாசம். இதோடு, சர்க்கார், முதுகுளத்தூர் தொகுதி மக்களுக்குச் செய்த அக்கிரமங்களையும், ஒழுங்கீனங்களையும் வெளியாருக்கும், நியாயத்திற்கும் இலேசாகக் காட்டித் தன்னைத் தப்புவித்துக் கொள்ளத்தான், நிலைமை கட்டுக்கடங்கி அமைதி நிலவுகையில் அரசாங்கம் என் மீது சிறைவாச உத்திரவைச் செலுத்தியதற்கு மற்றொரு காரணம். முதுகுளத்தூர் சம்பவங்களுக்கு என்னையே பொறுப்பாக்கிக் காட்டிவிடலாம் என்ற கெட்ட நோக்கில், சர்க்கார் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. எனவே, என்மீது சாட்டியுள்ளவை அத்தனையும் நியாயத்திற்கு விரோதமானவை என்று போர்டாருக்கு அறிவித்துக்கொள்கிறேன்.

என்னை நேரடியாக விசாரிக்கும்படியும், 28.9.1957ல் நான் மதுரையில் பேசிய பேச்சின் டேப்-ரிக்கார்டைத் திரும்ப போர்டுக்கு முன் வைத்துக்காட்ட வாய்ப்பளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் என்னைச் சாராதவை. நான் குற்றம் புரிந்தவனுமல்ல; புரிபவனும் அல்ல. ஆகவே, என்னைச் சிறைப்படுத்தி வைப்பதற்குரிய ஆதாரங்கள் போதவில்லை என்று அறிக்கை விடும்படி அட்வைசரி போர்டாரைக் கேட்டுக்கொள்கிறேன்". என்று தேவர் தனது பதிலை முடித்தார். தேவர் கொடுத்த பதிலு
க்கு எந்தவிதப் பதிலையும் அரசாங்கம் கொடுக்கவில்லை.



முதுகுளத்தூர் கலவரம்--4

பின்னர் இமானுவேல் கொலை வழக்கில் முதல் எதிரியாகத் தேவரைச் சேர்த்து, சென்னைச் சிறையிலிருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றிக் காவலில் வைத்தனர். இமானுவேல் கொலை வழக்கு விசாரணைக்கு கீழ்க்கோட்டும் மேல் கோர்ட்டும் விசேஷக் கோர்ட்டுகளாக அமைக்கப்பட்டு புதுக்கோட்டையிலேயே விசாரணை நடைபெற்று வந்தது. தமிழ்நாடெங்கும், தேவரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தன. மக்களிடையே வெகுஜன எழுச்சி ஏற்பட்டது. அதே சமயம் தேவரை விடுவிக்கக் கோரி ஆலயங்களில் வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.


தேவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் எந்த மந்திரியும், முதலமைச்சர் உட்பட தென்பாண்டி மண்டலத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு, தேவருக்கு ஆதரவான எழுச்சி மக்களிடையே வலுப்பெற்று நின்றது.

தேவர் மீதான கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. தேவரை விசாரிக்க, முழு நேர நீதி மன்றம் பனிரெண்டு நாட்கள் தனியாகச் செயல்பட்டது. முப்பத்தேழு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்து தீர்ப்புக் கூறும் நாள் அறிவிக்கப்பட்டிருந்தது.

1959 ஆண்டு ஜனவரி மாதம் 6 ம் தேதி இரவு. தங்களது தங்கத் தலைவன் எப்போது விடுதலை ஆவார்? என்று மிகுந்த பேராவலுடன் இரண்டு ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்த மக்கள் புதுக்கோட்டையில் குவியத் தொடங்கி விட்டனர். சென்னை, சேலம், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து கார்களிலும், பஸ்களிலும், ரயில்களிலும் புதக்கோட்டைக்கு மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்று கொண்டிருந்தது. புதுக் கோட்டை நகரமே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எங்கும் தேவர் விடுதலை பற்றியப் பேச்சு. தேவரைக் காண அனைவரும் ஏக்கப் பெரு மூச்சு. மாசற்ற தங்கத்தை, பசும்பொன் சிங்கத்தை, மூதறிவு மிகுந்த முத்துராமலிங்கத்தை, தன்னகத்தே தெய்வமாகப் போற்றிடும் தென்னகத்து நேதாஜியைப் பார்க்க வேண்டும் என்ற இதயத்துடிப்பு அனைவரிடமும் இருந்தது. அதே சமயம், ஏதாவது விபரீதத் தீர்ப்பு வந்து விட்டால், என்ன ஆவது? என்ற திகில் கூடி இருந்த அனைவரிடத்திலும் குடி கொண்டிருந்தது. வைகறைப் பொழுது எப்பொழுது விடியும்? என இரவெல்லாம் ஆயிரக்கணக்கான தாய்மார்களும் உறங்காமலே கண் விழித்திருந்தனர். பொழுது புலர்ந்தது கடலென திரண்டிருந்த மக்கள் மனதில் மகிழ்ச்சி ஒரு பக்கம் அதிர்ச்சி ஒரு பக்கம் குடி கொண்டிருந்தது. தீர்ப்புச் சொல்லும் நாள் 1959 ஜனவரி 7 ம் தேதி வந்து விட்டது. இனித் தீர்ப்புச் சொல்லும் நேரத்தை அலைகடலெனத் திரண்டிருந்த மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரியாக காலை 11 மணி. நீதிபதி அனந்த நாராயணன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். என்ன சொல்லப் போகிறாரோ? என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நீதிபதியின் அறிவிப்பு அவர்களை ஏமாற்றம் அடையச் செய்து விட்டது. ஏன் அப்படிபட்ட நிலைமை ஏற்பட்டது?

சரியாகப் பதினோரு மணிக்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்த நீதிபதி, சில நிமிட நேரம் கழிந்தவுடன், பிற்பகல் 2 மணிக்குத் தீர்ப்பு என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். பெருத்த ஆர்வத்திலும் எதிர்பார்ப்பிலும் இருந்த அந்த மக்களை நீதிபதியின் அறிவிப்பு ஏமாற்றத்துக்கு உள்ளாக்கத்தானே செய்யும்? மீண்டும் நீதிபதி சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்திற்க வந்து அமர்ந்தார். 50 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பைப் படித்தார்.

"தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று யூகிப்பதற்குக் கூட சாட்சியம் இல்லை. எனவே தேவரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கிறேன்" என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான குருசாமித் தேவர், காட்டுச்சாமித் தேவர், முனியசாமித் தேவர், சடையாண்டித் தேவர், பெரியசாமித் தேவர் ஆகியோரை சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தார் நீதிபதி. இதர மூன்று பேர்களான அங்குசாமித் தேவர், பேயன் முனியாண்டித் தேவர், தவசித் தேவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளே என்று தீர்மானித்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.

'தேவர் விடுதலை' என்ற சொல்லைக் கேட்டதும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தினர். ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.தேவர் விடுதலை அடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்து, மக்களுக்குக் காட்சி தந்ததும், மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, ஆரவாரம் செய்து, கோஷங்கள் எழுப்பிக் கரவொலி செய்தனர். தேவருக்கு பலர் பெரும்பெரும் மாலைகளை அணிவிக்க வந்தனர். ஆனால், தேவரோ, "முழு வெற்றிக்குப் பிறகே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். மாலைகள் எதுவும் அணிவிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கும். எனவே மாலைகளை ஆண்டவனுக்கு அணியுங்கள். என் பொருட்டு இத்தனை ஆர்வத்தோடு கூடிய அனைவருக்கும் நன்றி. அமைதியாகக் கலைந்து செல்க" என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலை ஆனதும் தேவர் முக்கிய தலைவர்களுடன் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில், பிரஹதாம்பாள் கோயில், ஐயனார் கோவில் முதலிய ஆலயங்களில் வழிபட்ட பிறகு, இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, "சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?" என்று கேட்டார்.அதற்கு சுவாமிகள், "உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவிர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்" என்று கூறினார். அதுபோலவே தேவர் விடுதலை ஆனபோது சுவாமிகள் சமாதியாகி விட்டார். அதனால்தான் விடுதலை ஆனதும் ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர். ஆடுதுறையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட தேவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது.

பிறகு, ஜனவரி 23ம் நாள் நேதாஜி பிறந்த தினத்தன்று, சென்னையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் தேவர். அன்று மதுரையில் பார்வர்ட் பிளாக் கட்சியினரும், ஜனநாயகக் காங்கிரஸ் கட்சியினரும் ஏற்பாடு செய்திருந்த நேதாஜி பிறந்த நாள் கூட்டத்தில் தேவர் கலந்து கொண்டு பேசினார். அரசியல் விரோதத்திற்காகத் தன்மீது போடப்பட்ட கொலை வழக்கு பற்றியும், தனது செல்வாக்கை அழிக்க, தன்னைப் பின்பற்றும் மக்கள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டிற்க நீதி விசாரணை வேண்டுமென்றும் வலியுறுத்திப் பேசினார். எல்லா இடங்களிலும் எழுச்சி மிக்க வரவேற்பைப் பெற்ற வண்ணம் தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல லட்சம் மக்களைச் சந்தித்தார் தேவர். 8.2.1959 ஆம் நாள் சென்னையில் ஜனநாயக காங்கிரஸ் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேவர், காங்கிரஸ் கட்சியின் அலங்கோல ஆட்சியைப் பற்றியும், அதனால் மக்கள் படும் கஷ்டங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துப் பேசினார். சென்னைப் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்ததும், சென்னையில் சில தினங்கள் தங்கி விட்டு பாராளுமன்றத்தில் பேசவதற்காகத் தேவர் டில்லி சென்றார். 1957ல் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர், முதுகுளத்தூர் கலவரம், பின்னர் கைது என்று சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ராஷ்டிரபதி உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தேவர் 17.2.1959ல் பேசினார். ஆளும் அரசின் போக்கு பற்றியும், வெளிநாட்டுப் பிரச்சினைகள் குறித்தும், மக்கள் வாழ்நிலை குறித்தும் தேவர் விரிவாகப் பேசினார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் 18.2.59ம் தேதி டெல்லி பதிப்பு தேவரின் உரை பற்றி எழுதியதாவது. "பாராளுமன்றத்தில் அன்று கடைசிப் பேச்சாளரான தேவர், தமது தீவிர மிக்க பேச்சின் மூலம் சபையின் முழுக்கவனத்தையும் தம்பால் குவிய வைத்து விட்டார் தேவரின் வெண்கலக்குரல் 
பாராளுமன்றத்தை ஈர்த்தது"


தமிழவேள்" உமாமகேசுவரனார்

பண்டைக் காலத்தில் பெருமை பெற்றுத் திகழ்ந்த வள்ளல் பெருமக்களில் "வேள்" என்னும் சிறப்பு அடைமொழி பெற்றவர் இருவராவர்.  ஒருவர், "வேள்" பாரி மற்றொருவர் "வேள்" "எவ்வி"  சங்க காலத்துக்குப் பிறகு, முதன்முதலாக "வேள்" எனும் பட்டத்தைப் பெற்றவர் தான் உமாமகேசுவரனார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான,
  • வடவாற்றுக்கும்
  • வெண்ணாற்றுக்கும்
இடையில் உள்ள "கருந்திட்டைக்குடி" எனும் கிராமத்தில், 1883ஆம் ஆண்டு மே 7ஆம் நாள் வேம்பப்பிள்ளை - காமாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.


தஞ்சாவூர் தூய பேதுரு கல்லூரியில் உமாமகேசுவரனார் நான்காம் படிவத்தில் சேர்க்கப்பட்டார். அவரது படிப்பு முடிவதற்குள் தந்தை வேம்பப்பிள்ளையும் காலமானார். உமாமகேசுவரனாரின் சிற்றன்னை இவரைத் தம் மூத்த மகன் போலவே வளர்த்துவந்தார்.

தஞ்சைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற உமாமகேசுவரனார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.நேர்மையான வழியில் செல்ல விரும்பிய அவருக்கு, அப்பணியில் நீடிக்க விருப்பமில்லை.

எனவே, சட்டப்படிப்பு படிக்க சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர்,  தஞ்சை கே.சீனிவாசப் பிள்ளையிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பிறகு தாமே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார். தம் இருபத்தைந்தாம் அகவையில், உலகநாயகி எனும் அம்மையாரை மணந்தார்.

இவருக்கு,
  • பஞ்சாபகேசன்
  • மாணிக்கவாசகம்
  • சிங்காரவேலு
என்ற மூன்று பிள்ளைகள்.

மூன்றாவது பிள்ளை, பிறந்து நான்கு மாதங்கள் ஆனபோது மனைவி உலகநாயகி காலமானார். தமது மனைவி இறந்த பின் மறுமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார் உமாமகேசுவரனார். துன்பத்துக்கு மேல் துன்பமாக, அவரது மூத்த மகன் பஞ்சாபகேசன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது இறந்தார்.  அவரது பெயரில் கரந்தைக் கல்லூரியில் ஒரு நினைவு நிதியை ஏற்படுத்தினார்.  அதன் வழியாக ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்குப் பொருள் வசதி செய்ய வழிவகுத்தார். உமாமகேசுவரனாரின் பேச்சாற்றல் வளர, அவரது வழக்குரைஞர் பணி மிகவும் உதவியாக இருந்தது.

தம்மிடம் வரும் கட்சிக்காரர்களிடம் "இவ்வளவு தொகை தர வேண்டும்" எனக் கேட்கமாட்டார்.  பணம் கொடுக்க இயலாத நிலையில் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக வழக்காடி வெற்றி தேடித்தந்தார்.  இவரது நேர்மையை அறிந்த அன்றைய அரசு, அவரை "அரசு கூடுதல் வழக்குரைஞர்" பணியில் அமர்த்தியது. தஞ்சை வட்டக்கழகத்தின் முதல் அலுவல் சார்பற்ற தலைவராகவும் தொண்டாற்றியுள்ளார்.  அவரது பதவிக்காலத்தில் வரகூர் - அம்பது மேலகரச்சாலை மற்றும் ஆலங்குடி - கண்டியூர்ச் சாலைகள் போடப்பட்டன.  மேலும் நாகத்தி, தொண்டரையன்பாடி என்னும் சிற்றூர்களுக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார்.  இவர் பொறுப்பேற்ற போது நாற்பது அல்லது ஐம்பது தொடக்கப்பள்ளிகள் தான் இருந்தன.

உமாமகேசுவரனார் அந்த எண்ணிக்கையை நூற்று எழுபதாக உயர்த்தினார்.

கூட்டுறவு இயக்கத்தில் அவருக்கிருந்த  ஆர்வத்தால், 1926ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் நாள்,  கூட்டுறவு நிலவள வங்கி ஒன்று தொடங்க முயற்சி எடுத்தார்.  16.2.1927 முதல் கூட்டுறவு அச்சகம் ஒன்றை ஏற்படுத்திச் செயல்படுத்தினார்.  இதேபோல 1938இல் கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகத்தையும் தொடங்கினார்.  இவற்றுக்கெல்லாம் உமாமகேசுவரனாரின் சிறந்த நிர்வாகத் திறனே காரணம். 1911ஆம் ஆண்டு மே 14ஆம் நாள் தொடங்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவராக  உமாமகேசுவரனாரைத் தேர்ந்தெடுத்தனர்.

இன்று ஆயிரக்கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும்.  அன்றே தொழிற்கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த உமாமகேசுவரனார், தமிழ்ச் சங்கம்
சார்பில் 6.10.1916இல் செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியைத் தொடங்கினார்.   மேலும், சங்கத்தின் சார்பில் 1928 - 29இல் கட்டணம் இல்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது.

உமாமகேசுவரனார் சங்கம் தொடங்கிய நான்காவது ஆண்டிலேயே "தமிழ்ப்பொழில்" என்னும் மாத இதழ் தொடங்கப்பட்டது.
தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பல அரிய நூல்களை வெளியிட்டார்.  1915இல் கட்டணமில்லாப் படிப்பகம் ஒன்றையும் தொடங்கினார்.  இவரது பெரும் முயற்சியின் விளைவாக தமிழ்ச் சங்கத்திற்காக 1928 - 30இல் "கரந்தைத் தமிழ்ப் பெருமன்றம்" எனும் கட்டடம் கட்டப்பட்டது.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா 1938 ஏப்ரல் 15,16,17 ஆகிய நாள்களில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் முதல் நாளன்று ஞானியாரடிகள் தலைமையில், நாவலர் சோமசுந்தர பாரதியார்  முன்மொழிய உமாமகேசுவரனாருக்குத் "தமிழவேள்" பட்டம் வழங்கப்பட்டது.  அவ்விழாவின் இரண்டாம் நாளில், கரந்தைத் தமிழ்க் கல்லூரியை தொடங்க வழிவகுத்தார்  உமாமகேசுவரனார்.

துறையூரில் நடைபெற்ற மாவட்டத் தமிழர் மாநாட்டில் நிகழ்த்திய வரவேற்புரை,   நெல்லைப்பாலம் இந்துக் கல்லூரியில் நடந்த சென்னை மாகாணத் தமிழர் முதல் மாநாட்டில் ஆற்றிய தலைமை உரை போன்றவை உமாமகேசுவரனாரின் பேச்சாற்றலை விளக்குவன.  "தமிழ்ப்பொழில்" இதழில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும், தலையங்கங்களும் அவரின் எழுத்தாற்றலுக்குச் சான்று பகர்வன.

இவரது முயற்சியால் தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றத்திலும், கலை மன்றத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஓர் இடம் கிடைத்தது.

தமிழில் நிறைய கலைச்சொற்கள் உருவாக வேண்டும் என்னும் விருப்பம் கொண்ட  உமாமகேசுவரனார், தமிழ்ப்பொழில் இதழில் சாமி வேலாயுதம் பிள்ளை என்பவரைக் கொண்டு,  கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நல்ல கலைச்சொற்களை உருவாக்கித் தந்தார். ஞானியாரடிகளின் மணிவிழாவின் போது, "செந்தமிழ்ப் புரவலர்" எனும் பட்டத்தை ஞானியாரடிகள்  அவருக்கு அளித்தார்.

சைவ சமயத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த இவர், மற்ற சமயங்களை வெறுக்கவோ,  எதிர்க்கவோ இல்லை.  மாறாக பிற சமயங்களின் வளர்ச்சிக்கு உதவி புரிந்துள்ளார். தாகூரால் உருவாக்கப்பட்ட சாந்தி நிகேதன் போல, தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் விளங்க வேண்டும் என்று எண்ணினார்.

அதன் பொருட்டுத் தம் நண்பர் அ.கணபதிப் பிள்ளை என்பவருடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா சென்று சாந்தி நிகேதனைப் பார்வையிட்டார். பிறகு காசி இந்துப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார்.

அப்போது அவரது உடல்நிலை குன்றியதால், அயோத்தியின் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 1941ஆம் ஆண்டு மே 9ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

  • கரந்தைத் தமிழ்ச் சங்கம்
  • இராதாகிருஷ்ணன் தொடக்கப் பள்ளி
  • உமாமகேசுவரர் மேல்நிலைப் பள்ளி
  • கரந்தை கலைக் கல்லூரி
  • திக்கற்ற மாணவர் இல்லம்
  • தமிழ்ச் சங்க நூல் நிலையம்
  • படிப்பகம்
  • தமிழ்ப்பெருமன்றம்
  • தமிழ்ப்பொழில் - இதழ்
ஆகியவை அனைத்தும் அவரது நினைவைப் பெருமையுடன் நிலைநிறுத்துகின்றன.


பி.யு.சின்னப்பா


பி.யு.சின்னப்பா எனும் நடிகரைப் பற்றி இந்த தலைமுறை இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் இவரும் பல படங்களில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றவர். இந்தக் கால கதாநாயகனைப் போல இளமை, அழகு போன்றவை அந்தக் கால நடிகர்களுக்குக் குறிப்பாக நாடகத் துறையிலிருந்து வந்து பாடி, நடித்துப் புகழ்பெற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் பி.யு.சின்னப்பா ஒரு திறமையான நடிகராகத் திகழ்ந்தவர். இவருடைய ஊர் புதுக்கோட்டை. தந்தை உலகநாத பிள்ளை தாய் மீனாட்சி. இவர் 1916 மே மாதம் 5ம் தேதி பிறந்தார். 

அப்போதெல்லாம் சினிமா ஏது? நாடகங்கள்தான். இவரது தந்தையும் ஒரு நாடக நடிகர் அதனால் சின்னப்பா இயல்பாக நடிகனாக ஆகிவிட்டார். ஐந்து வயதில் நடிக்கத் தொடங்கிய சின்னப்பா, நன்றாகப் பாடுவார். கர்நாடக சங்கீதம் இவர் அருமையாப் பாடக் கேட்க வேண்டும். "நாத தனு மனுசம்" என்கிற பாடலை இவர் அதே ராகத்தில் "காதல் கனி ரசமே" என்று பாடிய பிறகு ஒரிஜினல் பாட்டுக்கு மவுசு வந்து சேர்ந்தது.


புதுக்கோட்டையில் கோபாலகிருஷ்ண பாகவதர் என்பவர் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடி வந்தார். அங்கு பஜனைகள் அடிக்கடி நடக்கும். சின்னப்பாவும் புதுக்கோட்டையில் பஜனைப் பாடல்களைப் பாடி வந்திருக்கிறார். இளம் வயதில் நாடகத்துக்கு வந்துவிட்டதால் இவர் பள்ளியில் அதிகம் படிக்கவில்லை. இவர் நாடகக் கம்பெனியில் சேர்ந்தாரே தவிர இவருக்கு அங்கு ஒன்றும் பிரமாதமான முக்கியத்துவம் கிடைத்துவிடவில்லை. மீனலோசனி வித்வ பால சபாவில் இவர் சேர்ந்து நடித்தார். அந்த கம்பெனியில் டி.கே.எஸ். சகோதாரர்களும் அப்போது நடித்து வந்தனர். அந்தக் கம்பெனியில் முக்கியத்துவம் கிடைக்காததால் சின்னப்பா புதுக்கோட்டைக்கு அப்போது வந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி எனும் நாடகக் கம்பெனியில் நடிக்கச் சேர்ந்தார். அப்போது அவருக்குக் கிடைத்து வந்த சம்பளம் மாதம் 15 ரூபாய்.

இவருக்கு நன்றாகப் பாட வரும். ஒரு முறை இவர் தனிமையில் அமர்ந்து கொண்டு பாடிய பாட்டைக் கேட்ட அவருடைய கம்பெனி முதலாளி பாடியது யார் என்று விசாரித்து இவருக்கு முக்கிய வேஷங்கள் கொடுத்து சம்பளத்தையும் ஐந்து மடங்கு உயர்த்திக் கொடுத்தார். அவர் வேலை செய்த கம்பெனியில் பின்னாளில் புகழ் பெற்ற எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சக்ரபாணி, நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் போன்றவர்களும் நடித்து வந்தனர். சின்னப்பா நடிப்பதுடன் பாடவும் செய்ததாலும், இவருடைய பாட்டுக்கள் மிக நன்றாக இருந்ததாலும் இவருக்கு நல புகழ் கிடைத்தது. இவருடைய கம்பெனி சென்னையில் முகாமிட்டு பல மாதங்கள் நாடகங்களை நடத்தியது. அப்போது இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, இவரது பாட்டுக்களுக்கும் மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர்.


நாடகக் கம்பெனியில் நடிகர்களுக்கு வேலைக்கோ அல்லது வருமானத்துக்கோ எந்த உத்தரவாதமும் கிடையாது. நினைத்தால் வெளியேற வேண்டியிருக்கும். அந்தவொரு நிலை வருமுன்பாக சின்னப்பா கம்பெனியை விட்டு நீங்கி சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். அதன் பிறகு ஸ்பெஷல் நாடகம் என்று அவ்வப்போது யாராவது வந்து அவர்கள் நாடகங்களில் நடிக்கக் கேட்டுக் கொண்டால், அதில் போய் நடித்துவிட்டு சம்பளம் வாங்கிக் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் இவர் கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்றுக் கொண்டார். இதற்காக ஏற்ற ஆசிரியர்களை நியமித்துக் கொண்டார். கர்நாடக சங்கீதம் கற்பது மிகவும் சிரமமான காரியம். இவர் மிகுந்த அக்கறையோடு முறையாகக் கற்றுக் கொண்டார். இவரை நடிகர் என்று சொல்வதைவிட சங்கீத வித்வான் என்று சொல்லுமளவுக்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றார். கலை வந்து சேர்ந்த அளவுக்கு இவருக்கு நிதி வந்து சேரவில்லை. வருமானம் இல்லாமல் கஷ்டப்படத் தொடங்கினார். நடிப்பு ஒரு பக்கம், சங்கீதம் ஒரு பக்கம் இவற்றோடு உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் சேர்ந்து இவர் சிலம்பம், கத்திச் சண்டை போன்றவற்றையும் கற்று திறமை பெற்றார். அதில் இவர் சிறப்புப் பயிற்சியாக சுருள் கத்தி என்பதை எடுத்துச் சுற்றும் கலையில் தேர்ந்து விளங்கினார்.


இப்படி எதிலும் நிரந்தரமில்லாத நிலையில் கந்தசாமி முதலியார் (நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார்) இருந்த ஒரு கம்பெனியில் சேர்ந்து கொண்டார். இந்தக் குழு ரங்கூன் சென்றது. பர்மாவில் இருந்த ரங்கூனில் தமிழர்கள் நிறைய இருந்தனர். இவர்களுடைய நாடகங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் அங்கு நடித்த காலத்தில் இவரோடு எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர். சந்தானலட்சுமி, பி.எஸ்.சிவபாக்கியம், எம்.ஆர்.சாமிநாதன், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோரும் நடித்துக் கொண்டிருந்தனர். அங்கு சுமார் ஆறுமாத காலம் இவர்களுடைய நாடகங்கள் நடந்தன. தொடர்ந்து இவர் இலங்கை சென்று அங்கும் பல ஊர்களில் நாடகம் நடத்திவுட்டுத் திரும்பினார்.

இவர் நடித்த நாடகம் ஒன்றைப் பார்த்த ஜுபிடர் பிக்சர்சார் இவரைத் தங்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படம் சந்திரகாந்தா. அதில் இவர் ஓர் இளவரசனாக நடித்து நல்ல பெயர் வாங்கினார். இது வெளியான வருடம் 1936. அந்தப் படத்தில் இவருடைய பெயரை சின்னச்சாமி என்றுதான் போட்டிருந்தார்கள். அதன் பிறகுதான் அவருடைய பெயர் சின்னப்பா என்று மாறியது. சந்திரகாந்தா படத்தைத் தொடர்ந்து இவருக்குப் பட வாய்ப்புக்கள் வந்தன. பஞ்சாப் கேசரி, ராஜமோகன், அனாதைப் பெண், யயாதி, மாத்ருபூமி ஆகிய படங்களில் நடித்தார். இவையெல்லாம் மிகச் சுமாராகத்தான் ஓடின. அதன் பின் பட வாய்ப்புக்கள் இல்லாமல் வருந்தியிருந்த நேரத்தில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் இவரைப் பார்த்தார். அவர் தயாரிக்கவிருந்த உத்தமபுத்திரன் எனும் படத்துக்கு சின்னப்பாவை ஏற்பாடு செய்தார். அந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைக் கொடுத்தது. சின்னப்பாவின் புகழும் உச்சத்துக்குப் போனது. அதே படத்தை பிறகு சிவாஜி கணேசனைக் கொண்டு நடிக்க வைத்து வெளியாகி வெற்றி பெற்றதும் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம்.


சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் 1940இல் வெளிவந்தது. அதில் சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்துத் தூள் கிளப்பினார். இந்த வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இவர் தயாளன், தர்மவீரன், பிருதிவிராஜன், மனோன்மணி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் மனோன்மணி சுந்தரம் பிள்ளை எழுதிய கதை. இதில் சின்னப்பாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. மக்களின் பாராட்டுதல்களையும் அதிகம் பெற்றார். நம் காலத்தில் ரஜினி, கமல் என்று இருப்பதைப் போலவும், சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று இருந்ததைப் போலவும், இவர் காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா என்று இரு பெரிய நடிகர்கள் கோலோச்சி வந்தார்கள். முந்தைய நடிகர்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில்லை, ஆனால் இவரும் எம்.கே.டியும் அப்படி இல்லாமல் எதிரிகளைப் போல இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

பிருதிவி ராஜன் படத்தில் சின்னப்பாவுக்கு ஹீரோயின் ஏ.சகுந்தலா. இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் இவர்கள் இருவரும் கணவன் மனைவி ஆயினர். இவர்கள் திருமணம் 5-7-1944 அன்று நடைபெற்றது. சினிமாக்காரர்கள் வழக்கப்படி திருட்டுத் தனமாக இல்லாமல் ஊரறிய பிரபலமாக நடந்தது இந்தத் திருமணம்.

தொடர்ந்து இவர் ஆரியமாலா, கண்ணகி போன்ற படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். இந்தப் படங்கள் மூலம் இவர் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார். கண்ணகியைத் தொடர்ந்து குபேரகுசேலா, ஹரிச்சந்திரா, ஜகதலப்பிரதாபன், மஹாமாயா போன்ற படங்களில் நடித்தார். இவை நன்றாக ஒடி வசூலைக் கொடுத்தன.


இவருடைய பாடல்கள் இசைத்தட்டுக்களாகவும் வந்தன. வானொலியிலும் ஒரு முறை பாடினார், ஆனால் அதனால் வருமானம் இல்லாததால் விட்டுவிட்டார். தொடர்ந்து இவர் பங்கஜவல்லி, துளசிஜலந்தா, விகடயோகி, கிருஷ்ணபக்தி ஆகிய படங்களில் நடித்தார். மங்கையர்க்கரசி என்று ஒரு படம். அதில் இவருக்கு மூன்று வேடங்கள். அந்தப் படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதில் வந்த பாடல்களுக் ஹிட் ஆகி மக்கள் மத்தியில் பாடப்பெற்றன. வனசுந்தரி என்றொரு படம், அதற்கடுத்து ரத்னகுமார், சுதர்சன் ஆகிய படங்களும் வெளியாகின. இதில் சுதர்சன் சின்னப்பா இறந்த பிறகு வெளியாகியது.


மக்களின் அபிமானத்தைப் பெற்று மக்கள் கலைஞராகத் திகழ்ந்த பி.யு.சின்னப்பா 23-9-1951 அன்று தனது முப்பத்தைந்தாவது வயதில் காலமானார். இவருக்கு ஒரு மகன் உண்டு. அவர் பெயர் பி.யு.சி.ராஜாபகதூர். அவரும் ஒரே ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தொடர்ந்து ஒரு சில படங்கள் இவருக்குக் கிடைத்தாலும் தந்தையைப் போல இவர் பிரகாசிக்க முடியவில்லை. தமிழகம் தந்த பல கலைஞர்களில் பி.யு.சின்னப்பாவும் ஒருவர். வாழ்க அவரது புகழ்!

பா.வே. மாணிக்க நாயக்கர்

மறைக்கப்பட்ட மாமனிதர் பா.வே. மாணிக்க நாயக்கர்!
புலவர் பா.அன்பரசு
1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைத்துப் பார்ப்பது தேவையான ஒன்றாகும்.
மறைமலையடிகளார் தொடங்கிய "தனித்தமிழ்" இயக்கத்துக்கு மாணிக்க நாயக்கர் புரவலராக இருந்துள்ளார். இவர் கட்டுமானப் பொறியியல் அறிஞராகப் பணியாற்றியபோதும் இவரது மரபுநிலை காரணமாக இயற்கையிலேயே தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.

ந.மு.வேங்கடசாமி நாட்டார்,
சுத்தானந்த பாரதியார்,
கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறுவிய உமாமகேசுவரனார்,
ஈ.வெ.ரா.பெரியார்,
நாமக்கல் கவிஞர்,
மு.இராகவையங்கார்,
ஆபிரகாம் பண்டிதர்
முதலியோர் நாயக்கரின் சமகால அறிஞர்கள் ஆவர்.
மாணிக்க நாயக்கர் திருச்சிராப்பள்ளியில் செயற்பொறியாளராகப் பணியாற்றியபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புலவர்களை வரவழைத்து இலக்கிய உரையாடல் நடத்துவது வழக்கம். 1919ம் ஆண்டு தமிழ்ப் புலவர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். வட ஆந்திர நாட்டிற்கு இவர் மாற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் இந்த மாநாட்டைக் கூட்ட இயலவில்லை.

பல அறிஞர்களின் தொடர்பு இவருக்கு இருந்ததால் நாயக்கர் அறிவியல் சிந்தனை, தமிழ் ஒலி இலக்கணம், தமிழ் எழுத்துகளின் நுண்பொருள் விளக்கம், ஆயுத எழுத்தைப் பயன்படுத்தி எல்லா மொழிச் சொற்களையும் எழுதுதல்,
விலங்கியல் தொடர்பான அறிவு போன்றவை அவரிடம் அமைந்திருந்தன.

"தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும்," என்னும் தமது கருத்தை 1931ம் ஆண்டுக்கு முன்பே நாயக்கர் கொண்டிருந்தார்.

"அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி" என்னும் தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன.

நாமக்கல் கவிஞரின் ஓவியத் திறமையை அறிந்த பா.வே.மாணிக்க நாயக்கர் அவரை தில்லிக்கு அழைத்துச் சென்று, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளச் செய்தார். முடிசூட்டு விழா நிகழ்ச்சியை ஓவியமாகத் தீட்டிய நாமக்கல் கவிஞருக்குத் தங்கப்பதக்கம் கிடைக்கக் காரணமாகவும் இருந்துள்ளார். 1923 - 24ல் "செந்தமிழ்ச்செல்வி" இதழ் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து பல, தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அந்த இதழில் எழுதிவந்துள்ளார்.

தமிழகம்,
அறிவியல் தமிழ்ச் சொற்கள்,
வடிவு திருந்த அறிவு வளர்ந்த கதை,
கம்பன் புளுகும் வான்மீகி வாய்மையும்
ஆகிய கட்டுரைகள் செந்தமிழ்ச்செல்வி திங்களிதழில் வெளிவந்தன.

"அறிவியல் தமிழ்" பற்றிய சில தொடர்கள் "தமிழகம்" என்னும் இதழிலும், "ஜஸ்டிஸ்" இதழிலும் வெளிவந்தன.
1913ம் ஆண்டு மாணிக்க நாயக்கர் நீண்ட விடுப்பில், தமது சொந்தச் செலவில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அங்குள்ள மான்செஸ்டர் தொழில் பள்ளியில் தமது "Calculograph" என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்தார்.

தமிழ் உச்சரிப்பு (Tamil Phonology) என்னும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நிகழ்த்தியுள்ளார். ஆந்திர நாட்டில் பணியாற்றியபோது "திராவிடர் - ஆரியர் நாகரிகம்" என்னும் சொற்பொழிவை தெலுங்கு மொழியில் உரையாற்றினார்.

மாணிக்க நாயக்கரின் சொற்பொழிவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்தன. காரணம், ஆங்கிலேயரிடையே தமிழ் மொழியின் சிறப்பைப் பரப்ப வேண்டும் என்பதே. இவரது ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் தமிழாக்கம் செய்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்

காழி.சிவ.கண்ணுசாமிப்பிள்ளை,
க.ப.சந்தோஷம்
ஆகியோர்.

1926ம் ஆண்டு வெளியான "Madras - 200" என்னும் நூலில் விளக்கப்படங்கள் பல காணப்படுகின்றன. இந்த நூல் அன்றைய சூழலில் கற்றவர் நடுவில் மிகவும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அன்றைய "ஜஸ்டிஸ்" இயக்கம் நாயக்கரின் பணிகளைப் பாராட்டி ஒரு கையேடு வெளியிட்டது. இந்நூலைப் படிக்கும் போது, அந்த இயக்கம் அவரை முழுமையாக ஆதரித்ததை அறியமுடிகிறது. "மொழிமுதல் தமிழர் கடவுட் கொள்கை" என்னும் சொற்பொழிவில் இறைவடிவம் உருவம் அற்றது என்றும், அதற்குச் சான்றாகத் தொல்காப்பியரின்
கொடிநிலை,
கந்தழி,
வள்ளி
என்னும் நூற்பாவையும் காட்டுகிறார்.

"தமிழ் எழுத்துகளின் நுண்பொருள் விளக்கம்" என்னும் தமது நூலில் தமிழ் எழுத்துகளுக்கெல்லாம் முளை எழுத்து (Root letter)"ஓ" என்றும் அது எல்லா வடிவங்களும் பிறக்கக் காரணமானது என்றும் கூறி ஓங்காரத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஈ.வெ.ரா தமது கட்டுரை ஒன்றில் "பா.வே.மாணிக்க நாயக்கர் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்காக எவ்வளவோ செய்தார். அவரது ஓங்காரத்தின் மீது நான் கொண்டிருந்த வெறுப்பு அவரை முழுவதும் அறிந்துகொள்ள இயலாதபடி செய்துவிட்டது. அவர் இருந்திருந்தால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு எவ்வளவோ செய்திருப்பார்," என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் பணியாற்றியபோது பெரியாரின் இல்லத்தில் சிலகாலம் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1916ம் ஆண்டு மு.இராகவையங்கார் எழுதி, மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் வெளியிட்ட "தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னும் நூலை மாணிக்க நாயக்கர் படிக்க நேர்ந்தது. அதைப்படித்த நாயக்கருக்கு தொல்காப்பியத்துக்கு உண்மைப் பொருள் காண்பதற்குப் பதிலாகப் பல ஐயங்கள் எழுந்தன.

தமது ஐயங்களைக் குறிப்பிட்டு இராகவையங்காருக்கு நான்கு கடிதங்கள் எழுதியுள்ளார். அவற்றுக்கு இரு கடிதங்கள் வாயிலாக இராகவையங்கார் பதில்கள் எழுதியுள்ளார். இந்த பதில்கள் பெரும்பாலும் வினா வடிவிலேயே இருந்தன. இந்த வினாக்கள் தொடர்பாக ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களிடமிருந்தும் நாயக்கருக்கு இரு கடிதங்கள் வந்தன.
மேற்குறிப்பிட்ட எட்டு கடிதங்களையும் தொகுத்து "தமிழ்வகைத் தொடர் - தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னும் பெயரில் 1924ம் ஆண்டில் நாயக்கரே தமது சொந்தச் செலவில் நூலாக வெளியிட்டார்.

"ஐரோப்பியர்கள் டார்வின் என்பவருக்குப் பிறகு கண்டறிந்த இயற்கை உண்மைகளையும், இன்னும் காணாதிருக்கின்ற பெரும் பகுதிகளையும் நம் தமிழ் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு உணர்ந்திருக்கிறார்கள்," என்பது நாயக்கரின் ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்தது என்பது அவர் "அஞ்ஞானம்" என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையிலிருந்து தெரியவருகிறது.

"பண்டைத் தமிழ் மொழிச் செவ்வியையும், தமிழகத்தோர் வன்மையும், சிறக்கப் பரக்கச் சிதைவின்றிக் காட்டக் கிடைத்த அழியாப் பெருந்திடரித் (திடர் - மலை) தொல்காப்பியம் ஒன்றே" என்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் மாணிக்க நாயக்கர்.

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கான வரைமுறை அமைத்தவர் அவர்தான் என்றும் செவிவழிச் செய்தி உண்டு. இவர் சோதிடக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததால் தமது ஆயுட்காலத்தைக் கணக்கிட்டு, தமது ஆயுள் 60 ஆண்டுகள் என்று குறித்து வைத்திருந்தார். அதன்படி தமது அறுபதாம் வயதில் (25.12.1931) நள்ளிரவில் இயற்கை எய்தினார் என்பது வியப்பான செய்தி. நாயக்கரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் புகழ்பெற்றார். ஆனால் பல தமிழ் இலக்கியப் பணிகளையும், அறிவியல் சிந்தனைகளையும், கணக்கியல் முறைகளையும்
அறிமுகப்படுத்திய அந்த அறிஞரை இன்று தமிழ் உலகம் மறந்துவிட்டது.

1941ல் சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் நடத்திய புறநூனூற்று மாநாட்டில் பா.வே.மாணிக்க நாயக்கரின் திருவுருவப்படம் திறக்கப்பட்டது. தமிழ்ச் சமுதாயம் அவரை மறந்துவிட்டாலும் அவரது படைப்புகளும், ஆய்வுப் பணிகளும் மூத்த தமிழறிஞர்களின் மனதில் பதிந்துதான் உள்ளது. அவற்றை எதிர்கால இளைஞர்களுக்குக் கொண்டு செல்வது அரசின் கடமையாகும்.

உசிலம்பட்டி கவணம்பட்டி பண்டுக் கலவரம்

(அகமுடையார்,மறவர்,கள்ளர்)


இந்தப்பகுதியில் வாழும் பிரமலைக் கள்ளர்களின் சமூக வரலாற்றைப் பார்க்கும் பொழுது எட்டுநாடு, இருபத்தியெட்டு உபகிராமம் என்ற கள்ள நாட்டுப் பகுதியில் கள்ளர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையில் ஒரு மேம்பட்ட சமூக உறவு இருந்துள்ளதற்கான அடையாளங்களை நம்மால் பார்க்க முடிகிறது.
கள்ள நாட்டுப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் கள்ளர்கள் மற்றும் தலித்துக்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் உமைகள் அவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எட்டு நாட்டில் ஒரு நாடான கொக்குளத்தில் ஆதி தொட்டு இன்று வரை ஒரு தலித்தான் பூசாரியாக இருக்கின்றார். அவரிடம் தான் கொக்குளம் ஆறு ஊரைச் சேர்ந்தவர்களும், வாக்கு கேட்டு, திருநீறு வாங்கி பூசிக் கொண்டிருக்கின்றனர்.

கருமாத்தூர் கடசா நல்லகுரும்பன் கோயில் அய்யம் பிடுக்கி ஒரு தலித். மீனாட்சிபட்டி மதீச்சிய கருப்பு கோயில் பூசாரி தலித். வகூரணி பள்ளக்கருப்புப் கோயில் கொப்புற பூசாயும், கிடாவெட்டியும் கள்ளர்கள், கோடாங்கியும் உள் பூசாரியும் தலித்கள், இது தலித்தும் கள்ளரும் இணைந்து கும்பிடும் கோயில். கள்ளபட்டி வெண்டி கருப்புக்கோயில் பூசாரி தலித், கோடங்கி கள்ளர். புத்தூர் பூங்கொடி ஐய்யனார் கோயில் ஐய்யனார் தலித் மற்றும் கள்ளர்களின் குலதெய்வமாகும்.


எனவே இருவரும் பங்காளிகள் என்று இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல் உசிலம்பட்டி கள்ளர்கள் மத்தியில் பஞ்சாயத்து செய்யவும், சத்தியம் செய்யவும் முக்கியக் கோயிலாக இருப்பது வடுகபட்டி போயன் கருப்பு கோயில். இது தலித்துகளின் கோயில். தலித் தான் பூசாரி. உடமையற்றவர்களாகிய இரண்டு சமூகத்திற்கும் இடையில் கடந்த காலத்தில் நிலவிய பண்பாட்டு ஒற்றுமையின் அடையாளங்களே இவைகள்.
கள்ளர்கள் விவசாயப் பிரிவினர் அல்லர், காவல் மற்றும் களவு தொழினை செய்து வந்தவர்கள். சமவெளிப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் என்றே இவர்கள் வரையறுக்கப்படுகிறார்கள். கடந்த இரு நூற்றாண்டாக பரவி வந்த இந்துமயமாக்கலுக்கு உட்படாத இனக்குழுவாக இவர்கள் இருந்து வந்துள்ளதை மதுரையின் வரலாற்றை எழுதிய என்.கெச்.நெல்சன் போன்றவர்களும் மற்ற பல ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.
இதுமட்டுமல்ல இஸ்லாமியர்களின் பழக்கவழக்கங்களின் தாக்கம் அதிகமுள்ள ஒரு இனக்குழுவாகவும் இதுவுள்ளது. இஸ்லாமியர்களுக்கே உரிய ஒரு பழக்கமான சுன்னத் செய்யும் பழக்கம். இப்பொழுது வரை கள்ளர் இனத்தில் நடைமுறையில் உள்ளது. திருமணத்தின் பொழுது மாப்பிள்ளையை குதிரையின் மீது அமர வைத்து முகத்தை மூடி அழைத்துவரும் பழக்கம் சமீபகாலம் வரை இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. இஸ்லாமியப் பெண்களைப் போலவே காதில் கொப்பு, குருத்தட்டு, முருக்குச்சி, கழுத்தில் தாக்குப் பதில் கருப்புபாசி (பொட்டுமணி) ஆகியவற்றை கள்ளர் இனப் பெண்கள் அணிகின்றனர்.
இதுமட்டுமின்றி பெண்ணுரிமைப் பார்வையில் முற்போக்கான பண்புகளை இந்த இனக்குழு இன்று வரை கொண்டுள்ளது. விவகாரத்து பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு, எந்தப் பெண்ணும் விவகாரத்துப் பெற்றுக் கொள்ளலாம், அதற்கான வழிமுறைகள் மிக எளியது. அதுமட்டுமின்றி விவகாரத்திற்கான நஷ்ட ஈடும் உண்டு என்று, கள்ள நாட்டு சட்டங்களில் இருந்தும், பழக்க வழக்கங்களில் இருந்தும் அறிய முடிகிறது.
இதுமட்டுமின்றி, விவகாரத்து செய்து கொண்டவர்கள் மற்றும் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை கொண்டவர்கள். இவ்வாறாக இந்து மதத்தின் சாயல்கள் பெரிய அளவு விழுந்து விடாத ஒரு இனக்குழுவாக போன நூற்றாண்டு வரை பிரமலைக் கள்ளர் இனக்குழு இருந்து வந்துள்ளது.
இந்தக் காரணங்களால் தான் இந்தப்பகுதியில் சுமார் 130 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற கத்தோக கிருத்துவமதமானது தனது தேவாலயத்தில் ஒரு கிறித்துவ ஆணோ, பெண்ணோ, பிரமலைக் கள்ளர் இனத்தைச் சார்ந்த ஒரு ஆணையோ, பெண்ணையோ, திருமணம் முடித்துக் கொள்ள எந்த தடையும் விதிக்காமல் அனுமதி அளித்தது. அது இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
பிரிட்டிஸ் அரசு 19ஆம் நூற்றாண்டில் தனது நவீன காவல் கொள்கையை அறிமுகப்படுத்திய பொழுது ஏற்கனவே காவல் பணியில் இருந்த கள்ளர்களுக்கு எதிரான செயல்பாடாக அது அமைந்தது. கிராம காவல், குடிக்காவலை சட்ட விரோதமென அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, மாற்று ஏற்பாடு ஏதுவுமில்லாமல் கள்ளர்கள் நிர்கதியாக்கப்பட்டனர்.
இந்நிலையில் மறைமுகமாக காவல் மற்றும் துப்புக்கூ முறை உருவானது. இதனை தடுக்க நெடுங்காலம் வரை பிட்டிஸாரால் முடியவில்லை. எனவே கள்ளர்களுக்கு எதிராக பிற விவசாய சாதியினை மோத விடுவதில் அரசு முக்கிய பங்காற்றியது. இதன் விளைவு தான் 1895ல் திண்டுக்கல் பகுதியில் நடந்த பண்டுக் கலவரம். பிரிட்டிஸாரின் ஆட்சி காலத்தில் மிக நீண்ட காலம் நடைபெற்ற கலவரம் இது. அதற்கு காரணம் அரசின் மறைமுக ஆதரவு இந்த கலவரத்தை நடத்தியவர்களுக்கு இருந்தது. இதன் மூலம் திண்டுக்கல் சமவெளிப் பகுதி முழுவதிலும் கள்ளர்கள் தங்களின் காவலை இழக்க நேட்டது. இந்த கொள்கையின் தொடர்ச்சிதான் 1914ல் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டம்.
ஒரு குறிப்பிட்ட இனத்தில் பிறந்தாலே அவன் குற்றவாளியாகத்தான் இருப்பான் என்ற கொடூரமான சட்டம். 12 வயது முதல் அவன் அரசின் குற்றவாளி பட்டியல் ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டவனாக இருப்பான். கட்டாயக் காவல் முகாம்களில் குடியேற்றப்படுவான். தேயிலை எஸ்டேட்டுகளுக்கு அனுப்பப்படுவான். கட்டாய இராணுவப் பணிகளுக்கு அனுப்பப்படுவான். எந்த நிமிடமும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவான்.
இந்தியாவெங்கும் இந்த கொடூரமா ன அடக்குமுறைச்சட்டத்தில் சுமார் தொண்ணூறாயிரம் பேர் பதியப்பட்டார்கள் என்றால் அதில் பிரமலைக்கள்ளர்கள் மட்டும் முப்பத்தி ஐயாயிரம் பேர் ஆவர்.
அப்படி என்றால் இந்த அடக்குமுறையின் கொடுமை இந்தப்பகுதியில் எவ்வளவு இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்தக் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக ஜார்ஜ் ஜோசப், சுப்புராயன், ஜானகி அம்மாள், பி.இராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்றவர்கள் பாடுபட்டார்கள். ஆனால் இதில் முத்துராமலிங்கத் தேவர் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் தொடர்ச்சியாக இதில் கவனம் செலுத்தி பிட்டிஸாருக்கு எதிரான இயக்கங்களை நடத்தினார்.
நாட்டு விடுதலைக்குப்பின் , குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டபின் அவர் அரசியல் கட்சியான பார்வர்டு பிளாக்கை இந்த இனமக்கள் முழுமையாக தழுவினார். குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக திராவிட இயக்கம் எதையும் செய்யவில்லை. இந்த சட்டத்திற்கு எதிரான சில நடவடிக்கைகளை இடதுசாரி இயக்கம் செய்த போதிலும் அதில் தொடர் கவனம் செலுத்தவில்லை.
துவக்கத்தில் காங்கிரஸ் கட்சி சட்டத்தை எதிர்த்துப் போராடினாலும் 1939ல் ராஜாஜி மந்திரி சபை அமைந்தபின் இச்சட்டத்தை நீக்க முடியாது என்று காங்கிரஸ் வெளிப்படையாக சொன்னபின் இந்த பகுதிக்குள் அந்த இயக்கத்தால் நுழையவே முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் தேசிய இயக்கத்தின் தாக்கமோ, இடதுசாரி இயக்கத்தின் தாக்கமோ, திராவிட இயக்கத்தின் தாக்கமோ இல்லாத பகுதியாக இதுமாறியது. இந்தக் குறிப்பிட்ட இனமக்கள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குள் இருக்கும் நிலை உருவானது. ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் இருக்குமோ, அந்த வடிவத்தில் தான் அதற்கு எதிரான நடவடிக்கைகளும் அமையும். எனவே தான் ஒரு குறிப்பிட்ட சாதியின் மீது பயன்படுத்தப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அந்த குறிப்பிட்ட சாதியின் அடிப்படையிலான ஒற்றுமை உருவானது.
இந்த ஒற்றமையானது, சட்டம் வாபஸ் பெற்றபின், அச்சட்டத்திற்கு எதிராகப் போராடிய அரசியல் கட்சியின் அடித்தளமாக மாறியது. அந்த அரசியல் கட்சியானது 1950களுக்குப் பின் மேற்கொண்ட சாதிய பகைமையின் அடிப்படையிலான செயல்பாடு. இந்தப்பகுதியில் சாதீய மனோபாவத்தை, பெருமிதத்தை, வெறியை விஷம் போல ஏற்ற வாய்ப்பாக அமைந்தது.
அப்படி ஏற்றப்பட்டதன் முற்றிய வடிவங்கள் தான் இன்று நாம் காணுகிற பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம். இதற்கான பொருளியல் காரணிகள் மிக முக்கியமானவை. குறிப்பாக 1950களில் கட்டப்பட்ட வைகை அணையால் இந்த பகுதியில் புதிய விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டது. இதனால் செல்லப்பட்டி ஒன்றியத்தில் கணிசமான பிரமலைக் கள்ளர்கள் சிறு விவசாயிகளாக மாறினர். நிரந்தர வருமானம், தொழில் என்று எதுவும் இல்லாத ஒரு வாழ்க்கை முறைமாறி உடமையாளர்களாக பரிமாணம் அடைந்தனர்.
அதுவரை விவசாயத் தொழிலை பார்த்திராத ஒரு சமூகம், அரசால் விவசாயத்திற்குள் புகுத்தி விடும் பொழுது இரண்டு விளைவுகள் ஏற்பட்டன. இதனை மேலூர் கள்ளர்களின் வாழ்விலும் பார்க்க முடிகிறது, உசிலம்பட்டிப் பிரமலைக் கள்ளர்களின் வாழ்விம் பார்க்க முடிகிறது. அதுவரை அரசுக்கு வரிகட்டாத, சட்ட ஒழுங்கைக் கடைபிடிக்காத, நில அளவைக்குக் கூட அனுமதி அளிக்காத பகுதியாக இருந்த மேலூரில் பெரியார் அணை கட்டப்பட்ட தண்ணீர் வந்தவுடன்,
ஒவ்வொரு ஊராக அரசுக்கு கட்டுப்படுவோம், சட்ட ஒழுங்கை மதிப்போம் வரிகட்டுவோம், என்று எழுதி வாங்கி தண்ணீர் கொடுத்தது பிரிட்டிஸ் அரசு. இதன் விளைவாக பத்தே ஆண்டுகளில் விவசாய சாதியினராக மேலூர் கள்ளர்கள் மாறினர்.
போலீஸ்துறை சாதிக்காததை பொதுப்பணித்துறை சாதித்தது என பிரிட்டிசார் புகழ்ந்தனர். இதனால் தான் குற்றப்பரம்பரை சட்டம் இங்கு அமுல்படுத்தப்படவில்லை. இது இரண்டு விளைவுகளை உருவாக்கியது. ஒன்று நில உடமையாளனாக மாறி அதை காப்பாற்ற அரசின் மேலதிகாரத்தை ஏற்று முறையாக வரி செலுத்தி சட்ட ஒழுங்கிற்கு கட்டுப்பட்டது. இரண்டு, உடமையாளராக மாறியவுடன் தான் சமூகத்தின் மேல் சாதி என்ற மனோநிலையும், பெருமிதமும் தனக்கு கீழ் உள்ளவர்களின் மீதான கட்டுப்பாடற்ற தீண்டாமையை நிலை நிறுத்துவது.
இதற்கான உதாரணங்கள் தான். அம்பேத்கார் நடத்திய பத்திரிக்கையில் 1940 களில் மேலூர் பகுதி பற்றி வந்த எண்ணற்ற கடிதங்கள் முதல் மேலவளவு வரை. இதே அனுபவம் தான் 1950களுக்குப்பின் இன்றுவரை உசிலம்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ளது. ”’
உடமையற்ற வர்க்கமாக இருந்தபொழுது கள்ளர்களுக்கும், தலித்துக்களுக்கும் இடையில் நிலவிய சமூக உறவுகள், கள்ளர் சமூகம் உடமைவர்க்கமாக மாறியபின் தலைகீழானது. கடந்த காலங்களில் நடந்துள்ள இந்த சமூக அரசியல், பொருளியல் காரணங்கள் இந்தப்பகுதியில் சாதீயக் கருத்துக்கள் கெட்டிப்படவும் விஷம் போல் உச்சத்திற்கு ஏறவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் கொடூரத்தை த்தான் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
பாண்டித்துரைத்தேவர்

"சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர். பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார்.அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார்.1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர்( pandidurai thevar ) மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர்.பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம்.மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம்"செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய;தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், அரசன் சண்முகனார், இராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், புலவர் அப்துல்காதிர் இராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது."தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர்.தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர் .