அகமுடையார் சமுதாய அமைப்பு பிரதிநிதிகளின் ஆலோசனைக்கூட்டம்.சக்தி-ரமா திருமண மண்டபம்,மாநகராட்சி காலனி,விமானநிலையம் சாலை,மதுரையில் 23-09-2012- ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு சரியாக தொடங்கப்படும்..

கொள்கைகள்

இயக்க கொள்கைகள்
  • அகமுடையோருக்கான  இட  ஒதிக்கீடு,
  • கட்டாயக்கல்வி  விழிப்புணர்வு,
  • அரசியலில் அங்கீகாரம் வகிப்பது,
  • தொழில்  முனைவோராகுவதற்க்கான தளம்  அமைத்தல்,
  • கிராமப்புற  இளைஞர்களை  மேன்மைப்படுத்துவது,
  • சட்ட  விழிப்புணர்வு  மையம்  அமைத்தல்,
  • தமிழரின் வீர  விளையாட்டுகள் மேம்பட  மையம்  அமைத்தல்,
  • நம்  இன  இளைஞர்களுக்கான   கலை மற்றும் பண்பாட்டு  தளத்தை  உருவாக்குதல்.  
1 அகமுடையோருக்கான இட  ஒதிக்கீடு :
                  அகமுடையோருக்கான இட ஒதிக்கீடு கோரி  இளைஞர்களை ஒருங்கிணைத்து அரசிடம்  உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம்  போன்ற  வழிமுறைகளில்  போராடுவோம் .

கட்டாயக்கல்வி   விழிப்புணர்வு:
                  கல்வி இன்று வியாபார நோக்கமாக உள்ளது.   ஆகையால், நமது  சமுதாயத்தைச்  சேர்ந்த  பெரும்பலானோர் அடித்தட்டு  மக்களாய்  இருக்கின்ற  காரணத்தால்  போதிய  கல்வி கிடைக்காமல்  நம் சமுதாயம்  கல்வியில்  மிகவும்  பின்தங்கி  உள்ளது ஆகையால் ,நம்  இனத்தின்    கல்வியறிவை  மேம்படுத்த தேவையான  விழிப்புணர்வை கல்வியின்   அவசியத்தை அவர்கள்   உணரும்படியாக   கிராமப்புற   மாணவர்களுக்கான   மாலை நேர  வகுப்புகள்   மற்றும் தொடர்ந்து கல்வி கற்க   தேவையான அனைத்து  உதவிகளையும் செய்ய முயற்சி செய்தல். மேல்நிலை மற்றும் கல்லூரி  சேர்க்கைக்கான  உதவிகளையும் செய்வோம்.  

3  அரசியலில்  அங்கீகாரம்   வகிப்பது:
                  சுதந்திர   இந்தியாவில்   இதுவரை   தமிழ்நாட்டு   அரசியலில் கிட்டத்தட்ட   1 கோடி   மக்கள்   தொகையைக்  கொண்ட  அகமுடையோருக்கான    அரசியல்  அங்கீகாரத்தை  எந்த ஒரு   அரசியல்  அமைப்புகளும்   நமக்கான    எந்தஒரு   உரிமையும்  இதுவரை  அளிக்காததால் நமக்கான   அரசியலை   போரடிப்பெற்று  அதனால்  நமது   சமுக  முன்னேற்றத்திற்க்கான  பாதையை  அமைத்து   கொள்வது.

 4  தொழில்  முனைவோராகுவதற்க்கான தளம்  அமைத்தல்
                  சுய வேலைவாய்ப்புகள் மற்றும்   சிறுதொழில்   விழிப்புணர்வு  மையம்  அமைத்தல், அவரவர்  தகுதிக்கேற்ற  வேலைவாய்ப்பினை  பெற்றுத்தர     தேவையான முயற்சிகளை  செய்தல்.

5  கிராமப்புற  இளைஞர்களை   மேன்மைப்படுத்துவது:
                 கிராமப்புற   மக்களின்   விவசாயம்   சார்ந்த   தேவைகளுக்கு  அவர்களின்   உரிமையப்பெற  அறிவுறுத்துவது, இளைய  தலைமுறைக்கு  விவசாயத்தின்  அவசியத்தையும் அதன் அழிவின்   காரணத்தையும்  எடுத்துரைப்பது  மற்றும்  இதைச்  சார்ந்த எல்லா  பணிகளுக்கும்  துணை  நிற்பது ,  சுற்றுப்புற சூழலை  பாதுகாக்க, சுகாதரமுள்ள   வாழ்க்கை  வாழ  அறிவுறுத்துவது.

6  சட்ட  விழிப்புணர்வு மையம்  அமைத்தல்
                   தீண்டாமைச்  சட்டத்தில்  பாதிக்கப்படும்   இளைஞர்கள்  சட்ட  அறிவு  விளக்கம்  பெற, 
மண  வாழ்க்கை   பிரச்சனைகளில்   சுமுக   தீர்வு  பெற மண  வாழ்க்கை  பிரச்சனைகள்  பெண்களுக்கான  உரிமைகள்  வரதச்சனைப் பிரச்சனைகள் தொழிலாளர்   தகராறுகளில்  நிவாரணம்  பெற  நீதிபதிகள், வழக்கறிங்கர்கள் , சட்ட வல்லுனர்களையும்  கொண்டு  சட்ட  விழிப்புணர்வு  முகாம்  அமைத்தல்

7  தமிழரின்  வீர விளையாட்டுகள்  மேம்பட  மையம் அமைத்தல்
                       தமிழர்களின்  வீர விளையாட்டான  ஏறுதழுவுதல்(ஜல்லிக்கட்டு ), சிலம்பாட்டம் , 
கபாடி  இது போன்ற  இன்னும்  பல தமிழர்களின்  வீரத்தை  அடையாளப்படுத்தும்  விளையாட்டுகளைபாதுகாக்கவும்  மற்றும் நடத்தவும்  தொடர்ந்து  முயற்சி  செய்வது.

8  நம் இன  இளைஞர்களுக்கான    கலை  மற்றும் பண்பாட்டு  தளத்தை உருவாக்குதல்:
                        இலக்கியம், நாடகம் இசை கவிதை   போன்ற  கலைப்பண்பட்டு   தளத்தில்  இயங்கும்  நமது    இன  மக்களின்   திறமைகளை   மேலும் ஊக்கப்படுத்தி  புதிய  தலைமுறையை  உருவாக்கவும்  நமது இனப் பெரியோர்கள் மொழி, கலைப்  பண்பாட்டு தளத்தில்  செயலாற்றி  
மறைந்த  பெரியோர்களின்   சேவையை  பாராட்டும்  விதமாக  அவர்களின்  புகழை  பரப்பும் விதமாக  அவர்களின்  திருவுருவப்படங்களும் நினைவுப்   பரிசுகளும், நினைவுப் புத்தகங்களும்  வழங்கி செயலாற்றுகிறோம்.   


                வரலாறைச் சொல்                                        தலைமுறையைஉருவாக்கு 

                என்ற எண்ணங்களுடன் ஒரு இயக்கம் உருவாக்கப் பட வேண்டும் என மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து அதற்கான ஒரு குழு அமைத்து   உருவானது.நமது வீரகுல அமரன் இயக்கம் அதற்கான ஒரு கோடியை ஏற்படுத்த முனைந்த பொழுது நம் குழுவால் அங்கிகாரம் பெற்று அதற்கான வண்ணங்ககளை முடிவு செய்தோம் அதன் வெளிபாடே சிவப்பு நிரக்கொடியும் அதில் மஞ்சள் நிறமும் மற்றும் வெள்ளை நிறமும்,கருப்பு வண்ணமும் அதன் பின்பு இந்த நான்க வண்ணங்ககள் எதை குறிப்பிடுவதாய் இருக்க வேண்டும் 



என்று நமது குழு கூடி இந்த கோடியில் என்ன உருவங்கள் பொறிக்கலாம் என்று விவாதித்து முடிவு எடுக்கப்பட்ட பொழுது நமது இயக்கத்தின்கொள்கைகளுடன் கூடியதாய் இருக்க வேண்டும் என ஆய்வு செய்துஉருவான சின்னங்களே நமது கொடியில் பொறிக்கப்பட்ட அடையாளங்கள்.

                                                      அதை உங்களுக்கு நமது தலையின் வாயிலாக வெளிபடுத்த முடிவு செய்து உங்களுக்கு சமர் செய்கிறோம் .

சிவப்பு :-
           நம் குலத்தில் மன்னர்களாகவும்,படைத் தளபதிகளாகவும் ,போர் வீரர்களாகவும் வாழ்ந்து நமது நாட்டை பாதுகாத்து வந்த காலங்களில் நம்மை அடிமை படுத்தி நம்மை ஆளுமை செய்து வாழத் துடித்த அன்னிய நாட்டினரை எதிர்த்து போரிட்டு ரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்த நம் முன்னோர்கள் வழியில் நாமும் நம் இனம் காக்க ரத்தம் சிந்த தயராக உள்ளோம் என்ற முடிவின் அடிப்படையில் உருவானதே சிவப்பு நிறம் .


கறுப்பு :-
                நமது இனம்,நாட்டிற்காக எவ்வளவு தியாகங்கள் செய்திருந்தாலும் நமது மக்களின் வாழ்கையில் இது வரையிலும் மதிப்பு மிக்க மனித இனமாக மதிக்காமல் இருட்டறை இனமாக கருதும் ஆட்சியாளர்களை கண்டிக்கும் நிறமாக கறுப்பு நிறம் பயன்படுத்த பட முடிவு செய்யப்பட்டது .

மஞ்சள் :-
      நமது குல மக்கள் எப்பொழுதும் நாட்டின் மீதும் இனத்தின் மீதும் பக்தியையும் பண்புகளையும் வளர்த்து  
வந்தவர்களே என்பதற்கான அடையாளம் மஞ்சள் நிறம்.

கொடியில் பொறிக்கப்பட்டுள்ள அடையாளங்களின் குறிப்புகள் 
                         சிங்கம் :- நமது முன்னோர்கள் அவர்கள் வாழ்க்கையை தொடங்கிய காலங்களில் உணவுக்காக 
வேட்டையாடும் பொழுதும்,தானியங்களை பயிரிட்டு அதை உணவாக்க பாடு பட்ட வேகம் ,மற்றும் நம் இனம் 
அரசர்களாக மாறிய காலங்ககளில் எதிரிகளை மிக அசுர வேகத்துடன் வீழ்த்தி வெற்றி வாகை சூடும் பொழுது 
காட்டில் தனக்கென புகழோடு வாழும் சிங்கத்தை போன்று வாழ்ந்தவர்களே நம் முன்னோர்களும் மன்னர்களும் 
ஆகையால் அவர்களின் உணர்வு மிக்க வீரத்தை வெளிபடுத்த பொறிக்கப்பட்ட அடையாளமே சிங்கம் சின்னம் .
                             வாள் :- நமது நாடு பல வீர செறிந்த மன்னர்களால் ஆளப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு தளபதிகளாக 
இருந்தவர்கள் நமது வீரகுல மக்களே அந்த மன்னர்கள் எதிரிகளுடன் போரிடும் போது நமது நாடு,நமது மக்கள் ,
நமது மண் வெல்லப்பட வேண்டும் என ரத்தம் சிந்தி போரிட்ட இனம் காத்த தளபதிகளே அவர்கள் ஆகையால் நம் தளபதிகள் பயன் படுத்திய கருவியாக நாம் வாளை நினைவு படுத்த கூடியதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து 
உருவாக்கப்பட்டதே வாளின் அடையாளம் .
                              ஈட்டி :- நமது நாட்டில் மன்னர்களாகவும் ,தளபதிகளாகவும் நம் இனத்தின் முன்னோர்கள் வாழ்ந்து 
வந்த காலத்தில் அவர்களுக்கு பின்னால் உடன் சென்று நாட்டையும் ,மன்னரையும் தளபதிகளையும் பாதுகாக்க 
முனைப்புடனுடன்,வீரத்துடனும் எந்த நேரத்திலும் உயிர்த்தியாகம் செய்ய வாழ்ந்தவர்களே நம் நாடு நமது 
இன போர் வீரர்கள் .அவர்கள் அன்று பயன்படுத்திய ஆயுதமாக ஈட்டியை
நினைவு கூர்ந்து அந்த வீரர்களை பெருமைபடுத்த முடிவு செய்து ஈட்டி அடையாளச் சின்னமாக பொறிக்கப்பட்டுள்ளது .
                                                          இதுவே நமது வீரகுல அமரன் இயக்கத்தின் கோடி பிறந்த வரலாறு.